உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / யாரையோ பாதுகாக்கின்றனர்!

யாரையோ பாதுகாக்கின்றனர்!

அஜித் பவார் சென்ற விமானம் விபத்தில் சிக்கியதற்கு விமானத்தை இயக்கிய வி.எஸ்.ஆர்., நிறுவனத்தின் அலட்சியம் காரணம் என விமான போக்குவரத்து ஆணையரகம் கூறுகிறது. ஆனால், இதுவரை போலீசார் வழக்குப் பதிவு செய்யவில்லை. அரசு யாரையோ பாதுகாக்க நினைக்கிறது. ரோஹித் பவார் எம்.எல்.ஏ., - தேசியவாத காங்., சரத் பவார் அணி

இனப்படுகொலையை பேசுங்கள்!

இஸ்ரேலுக்கு சென்று உள்ள பிரதமர் மோடி, அங்கு பார்லிமென்ட்டில் உரையாற்றும் போது காசா இனப்படுகொலை குறித்து குறிப்பிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோர வேண்டும். உலகிற்கு உண்மை, அமைதி, நீதி ஆகியவற்றின் ஒளியை இந்தியா தொடர்ந்து காட்ட வேண்டும். பிரியங்கா லோக்சபா எம்.பி., - காங்கிரஸ்

தைரியம் வேண்டும்!

இஸ்ரேல் பார்லிமென்டில் காசா நிலவரம் குறித்து பிரதமர் பேச வேண்டும் என காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா கூறியுள்ளார். அவர் மறதி நோயால் அவதிப்படுகிறார். இஸ்ரேலில் புகுந்து 1,200 பேரை ஹமாஸ் பயங்கரவாதிகள் கொன்ற போது இவர் வாய் திறக்கவில்லை. அதற்கு தைரியம் வேண்டும். கவுரவ் பாத்தியா செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி