உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காப்பி அடித்து விட்டனர்!

காப்பி அடித்து விட்டனர்!

அசாமில் போட்டித் தேர்வுகள் நடந்த போது, இணைய சேவை முடக்கப்பட்டதற்கு காங்., விமர்சித்தது. ஆனால், ஜார்க்கண்டில் ஆளும் அரசில் அங்கம் வகிக்கும் அக்கட்சி தற்போது அதையே செய்துள்ளது. எங்கள் யோசனையை அவர்கள் காப்பி அடித்துள்ளனர்.ஹிமந்த பிஸ்வ சர்மா, அசாம் முதல்வர், பா.ஜ.,

போராட்டம் நடத்துவோம்!

ராகுலுக்கு எதிராக கடுமையாகப் பேசிய பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகளை கண்டித்து, நாடு முழுதும் காங்., சார்பில் போராட்டம் நடத்தப்படும். அருவருக்கத்தக்க வகையில் பேசிய நிர்வாகிகளை கண்டிப்பதில், பிரதமர் மோடி தோல்வி அடைந்து விட்டார்.மல்லிகார்ஜுன கார்கே, தலைவர், காங்.,

வெட்கப்பட வேண்டும்!

ஒட்டுமொத்த இந்தியர்களின் பிரதிநிதியாக, அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி செல்கிறார். இதை காங்., புரிந்து கொள்ள வேண்டும். தொடர்ந்து அவதுாறாக பேசி வந்தால், அக்கட்சியை மக்கள் ஏற்க மாட்டார்கள். நம் நாட்டுக்கு எதிரானவர்களை சந்தித்ததற்கு ராகுல் வெட்கப்பட வேண்டும்.அனுராக் தாக்குர், லோக்சபா எம்.பி., - பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை