உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசிய நுாலாக திருக்குறள் தமிழ் சங்கம் கோரிக்கை

தேசிய நுாலாக திருக்குறள் தமிழ் சங்கம் கோரிக்கை

தங்கவயல்: தங்கவயல் தமிழ்ச்சங்கத்தில் நேற்று திருவள்ளுவர் தினம் கொண்டாடப் பட்டது. திருவள்ளுவர் சிலைக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டன. திருக்குறள் ஓதப்பட்டது.தமிழ்ச் சங்கத் தலைவர் சு.கலையரசன் பேசுகையில், ''கர்நாடகாவில் முதல் திருவள்ளுவர் சிலை தங்கவயலில் 1987ல் நிறுவப்பட்டது. உலகில் அதிக மொழிகளில் உள்ள பொது நுால் திருக்குறளாகும். இந்தியாவில் எழுத்து வடிவம் உள்ள அனைத்து மொழிகளிலுமே திருக்குறள் உண்டு. இது பொது நோக்கம் கொண்ட அறநெறி உரைக்கும் புனித நுாலாக விளங்குகிறது.''நாட்டின் தேசிய நுாலுக்குரிய அனைத்து தகுதியும் உள்ளது. இதன் தகுதியை எடை போடாத மேதைகள் உலகில் இருக்க முடியாது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திறனாய்வு செய்து, தங்களை அறிஞர்களாக வளர்த்துக்கொண்டனர்.''அனைத்து அம்சங்களும் நிறைந்த திருக்குறளின் உவமைகளை, நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியும் அவ்வப்போது எடுத்துரைத்து வருகிறார். திருக்குறளை, தேசிய நுாலாக அறிவிக்க வேண்டும். தமிழிலக்கிய வரலாற்றில் அவருக்கு அழியாத புகழ் கிடைக்கும்,'' என்றார்.தமிழ்ச் சங்க நிர்வாகிகள் கமல் முனிசாமி, தீபம் சுப்ரமணியம், நடராஜன் திருமுருகன், ஆர்மி முருகன், ஆர்.வி.குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ