உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மோசடியில் இது புதுசு: போலி தூதரகம் நடத்திய ஆசாமி கைது

மோசடியில் இது புதுசு: போலி தூதரகம் நடத்திய ஆசாமி கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காசியாபாத்: உத்தரபிரதேசத்தில் போலி தூதரகம் நடத்தி வந்த நபரை காசியாபாத் போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீசார் கூறியதாவது; காசியாபாத்தின் கவி நகர் பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து போலி தூதரக அலுவலகத்தை ஹர்ஷ்வர்தன் ஜெயின் என்பவர் நடத்தி வந்துள்ளார். கைது செய்யப்பட்ட ஜெயினும் அதே பகுதியில் தான் வசித்து வந்துள்ளார். வெஸ்டார்டிகா, சபோர்கா, பவுல்வியா, லண்டனியா என்ற யாருக்கும் பெயர் தெரியாத நாடுகளின் தூதராக இருப்பதாக நடித்து வந்துள்ளார். மேலும், சொகுசு கார்களிலும் தூதர அதிகாரிகள் பயன்படுத்தும் நம்பர் பிளேட்டுகளை பயன்படுத்தியுள்ளார். அதுமட்டுமில்லாமல், பிரதமர், குடியரசு தலைவர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுடன் இருப்பது போன்று போட்டோக்களை மார்பிங் செய்து வைத்துள்ளார். அவரிடம் இருந்து ரூ.44 லட்சம் ரொக்கம், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள், தூதரக அதிகாரிகள் பயன்படுத்தும் நம்பர் பிளேட்டுடன் கூடிய 4 கார்கள், பாஸ்போர்ட்கள், வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் சீலுடன் கூடிய போலி ஆவணங்கள், போலி பான் கார்டுகள், பல்வேறு நாடுகள் மற்றும் நிறுவனங்களின் 34 போலி சீல் கட்டைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகள், வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தி தருவதாக கூறியும், போலி நிறுவனங்கள் மூலம் ஹவாலா பரிமாற்றம் செய்தும் ஹர்ஷ்வர்தன் ஜெயின் சம்பாதித்து வந்துள்ளார்.இதையடுத்து, அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

அப்பாவி
ஜூலை 24, 2025 06:38

நல்லா தேடிப் பாருங்க. இந்திய வம்சாவளிகள் அந்த நாடுகளில் கட்டாயம் இருப்பாய்ங்க. கொடியசைச்சு வரவேற்பாங்க. போறதுக்கு விசா தேவையில்லை.


விருதுகுமார்
ஜூலை 24, 2025 06:34

அடடே... கூப்புட்டு ஆர்டர் ஆஃப் வெஸ்டார்ட்டிகா விருது குடுக்கலாம் போலிருக்கெ.


ஜெய்ஹிந்த்புரம்
ஜூலை 23, 2025 21:04

ஒவ்வொரு மோசடிக்கும் பின்னால் ஒரு குஜராத்தி பட்டேல் அல்லது ஜெயின் இருப்பார்கள்


Ramesh Sargam
ஜூலை 23, 2025 20:12

நீதிமன்றம் என்ன தீர்ப்பு அறிவிக்கும் என்று கூறட்டுமா? முதலில் ஜாமீன் கொடுக்கும். பிறகு போதிய சாட்சிகள் இல்லாததால் இந்த நீதிமன்றம் அவரை விடுவிக்கிறது என்று அறிவிக்கும் பாருங்க ….


தாமரை மலர்கிறது
ஜூலை 23, 2025 19:36

ஏமாளிகள் இருக்கும்வரை, ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்.


Anantharaman Srinivasan
ஜூலை 23, 2025 18:56

போலி தூதரகம் வெற்றிநடை போட்டது மாதகணக்கிலா ஆண்டு கணக்கிலா சொல்லவேயில்லையே.


Mario
ஜூலை 23, 2025 18:56

உத்தரபிரதேஷ் மாடல்


பெரிய குத்தூசி
ஜூலை 23, 2025 18:42

வெஸ்டார்டிகா, சபோர்கா, பவுல்வியா, லண்டனியா, திராவிடஸ்டா, லின்திராவிட, உதயநயன், தாராநிதி இதுபோன்ற பெயர்களில் தமிழ்நாட்டில் திராவிழ தூதரகம் நடக்குதாம், டிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதம் பிடிப்பாரா? அல்லது டிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதம் மதுரையில் டூப்ளிகேட் பாஸ்போர்ட் அடித்து கொடுத்தது போல் மெர்கண்டைநாட்டுக்கு விசா வும் பிரிண்ட் பண்ணுவாரா?


Anantharaman Srinivasan
ஜூலை 23, 2025 18:26

போலி தூதரகம் நடத்திய ஆசாமி கைது... தூதரகமென்ன போலி மந்திரி சபை நடத்தினாலும் ஆச்சரியப்படாதீர்கள். அந்த மாநில நபர்கள் கைதேர்ந்தவர்கள்.


JANA VEL
ஜூலை 23, 2025 17:53

மோடி ஆட்சியில் கண்டுபிடித்து தடுத்தார்கள். மற்ற உங்களுக்கு பிடித்த கட்சி என்றால் விசா தந்து கடத்த தங்கமும் இருப்பார்கள்.


Anantharaman Srinivasan
ஜூலை 23, 2025 18:20

பேஷ் பேஷ்.. சூப்பரா பாராட்டு. நீரவ் மோடி, லலித் மோடி, விஜய் மல்லையா, யார் ஆட்சியில் தப்பிச்சென்றார்கள். இன்னும் தப்பிச்சென்ற யாரையும் இந்தியாக்கு கொண்டுவரவில்லை. 3 வருடம் முன்பு விஜய்மல்லையாவை சிறை வைக்க தனி வீடு கூட தாயாராச்சு. இவர்களுக்கு இன்னும் ஆதரவு தருவது யார்..?