மேலும் செய்திகள்
பிரபல பின்னணி பாடகி தற்கொலை முயற்சி
05-Mar-2025
ஹைதராபாத்: தன்னை பற்றியும், தனது குடும்பத்தினர் குறித்தும் வதந்தி பரப்பி வருவதாக பிரபல பின்னணி பாடகி கல்பனா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாக இருப்பவர் கல்பனா, 44. அண்மையில் தனது வீட்டில் மயங்கிய நிலையில், போலீசாரால் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள், கல்பனாவை பரிசோதித்ததில், அவர் அளவுக்கு அதிகமான துாக்க மாத்திரைகளை சாப்பிட்டது தெரியவந்தது. செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=nharmgh0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதற்கு முன்பாக, மருத்துவமனையில் கண் விழித்த கல்பனாவிடம், போலீசார் வாக்குமூலம் பெற்றனர். இதில் அவர் கூறியதாவது: கடந்த 4ம் தேதி கேரளாவின் எர்ணாகுளத்தில் இருந்து ஹைதராபாதுக்கு வந்தேன். துாக்கமின்மை காரணமாக, முதலில் எட்டு துாக்க மாத்திரைகளை எடுத்துக்கொண்டேன். இதைத்தொடர்ந்து, கூடுதலாக 10 துாக்க மாத்திரைகளை உட்கொண்டேன். டாக்டர் பரிந்துரைத்த அளவை விட, அதிக துாக்க மாத்திரைகளை தவறுதலாக எடுத்ததால், வீட்டில் நான் மயங்கி விழுந்தேன். நான், தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை, எனக் கூறினார். இந்த நிலையில், தன்னை பற்றி வதந்தியான செய்திகள் பரவி வருவதாகக் கூறி பாடகி கல்பனா வீடியோவெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது: என்னோட வாழ்க்கையில், எனக்கும், என் கணவருக்கும் எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை. தனிப்பட்ட பிரச்சினையும் இல்லை. எனக்கு ரொம்ப நல்ல கணவரும்,அழகான மகளும் உள்ளனர். இவங்க என் வாழ்க்கையில எனக்கு கிடைச்சதுக்கு கடவுளுக்கு நான் ரொம்ப நன்றி கடன்பட்டு இருக்கேன்.இந்த வயதில் பி.எச்.டி., எல்.எல்.பி., உள்ளிட்ட நிறைய விஷயங்களை படித்துக் கொண்டிருக்கிறேன். எனது இசை தொழிலிலும் நான் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறேன். இதனால் எனக்கு மன அழுத்தம் அதிகரித்தது. சரியான தூக்கமும் இல்லை. எனக்கு இன்சோமியா பிரச்சினை இருப்பதாக தெரிவித்தனர். அதற்கான சிகிச்சை எடுத்து வருகின்றேன், இவ்வாறு கூறினார்.
05-Mar-2025