உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் மக்கள் விருப்பம் இதுதான்; சூசகமாக சொல்கிறார் ஜெய்சங்கர்!

டில்லியில் மக்கள் விருப்பம் இதுதான்; சூசகமாக சொல்கிறார் ஜெய்சங்கர்!

புதுடில்லி: டில்லியில் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்பும் மனநிலையில் உள்ளனர் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சூசகமாக தெரிவித்தார்.டில்லியில் முதல்வர் ஆதிஷி தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. 70 தொகுதிகளை கொண்ட டில்லி சட்டசபைக்கு இன்று தேர்தல் நடக்கிறது. காலை 7 மணிக்கு ஓட்டு பதிவு துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது மனைவி லட்சுமி பூரியுடன் ஆனந்த் நிகேதனில் உள்ள பள்ளியில் ஓட்டளித்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4tbp932r&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0டில்லி துக்ளக் கிரசென்ட்டில் உள்ள பள்ளியில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஓட்டளித்தார். பின்னர் அவர் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: நான் ஒரு ஆரம்ப கால வாக்காளராக இருந்தேன். ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்பும் மனநிலையில் உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.சில நாட்களில் முன், ''டில்லியில் உள்ள மக்களுக்கு எந்த வசதியும் கிடைக்கவில்லை. வெளிநாடுகளுக்கு செல்லும்போது இந்த உண்மையை சொல்லாமல் மறைத்து விடுகிறேன். வெளியில் சொல்லவே வெட்கமாக இருக்கு,'' என, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை