உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்!

ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்!

நம் நாட்டில் குடும்ப அரசியல் ஆதிக்கம் செலுத்துவது, தலைமை என்பது பிறப்புரிமை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது. இது, ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல். தகுதி அடிப்படையில் தலைவரை தேர்ந்தெடுப்பது, எத்தனை ஆண்டுகள் பதவியில் நீடிப்பது உள்ளிட்டவற்றை வரையறுப்பது அவசியம். சசி தரூர் லோக்சபா எம்.பி., காங்கிரஸ்

அடமானத்திற்கு வைப்பர்!

ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தேஜஸ்வி அளித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளை கண்டு பா.ஜ.,வினர் பதற்றமடைந்துள்ளனர். தே.ஜ., கூட்டணி, பீஹாரை அடமானம் வைக்க விரும்புகிறது. எனினும், இந்த முறை பீஹார் மக்கள் சமூக நல்லிணக்க ஆட்சியை தேர்ந்தெடுப்பர். எனவே, பா.ஜ.,விடம் இருந்து பீஹாரை காப்பாற்றுங்கள். அகிலேஷ் யாதவ் தலைவர், சமாஜ்வாதி

அவமானத்திற்கு அமைச்சகம்!

பா.ஜ., அரசின் வளர்ச்சியை பற்றி பேசாமல், எதிர்க்கட்சி தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் அவம தித்து பேசி வருகின்றனர். இவர் தலைமையிலான அரசு, அவமான அமைச்சகத்தை உருவாக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தான், பா.ஜ., அரசு அதிக கவனம் செலுத்துகிறது. பிரியங்கா லோக்சபா எம்.பி., - காங்.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

KOVAIKARAN
நவ 04, 2025 10:57

பா.ஜ., அரசின் வளர்ச்சியை பற்றி பேசாமல், எதிர்க்கட்சி தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் அவமதித்து பேசி வருகின்றனர் என்று காங்கிரசின் இளவரசி ப்ரியங்கா பேசுகிறார். பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மிகவும் மென்மையாக பேசுகிறார்கள், பிரியங்கா அவர்களே. இன்னும், உங்கள் பாட்டி இந்திரா, மற்றும் உங்கள் கொள்ளுத்தாத்தா நேரு அவர்கள் இருவரும் இந்த நாட்டிற்கு செய்த துரோகத்தை மக்களுக்குத் தெரியக்கூடாது என்று நீங்களும் உங்கள் குடும்பமும் மறைத்து வைத்ததெல்லாம், பாஜக ஆட்சிக்கு வந்தபின் ஒவ்வொன்றாக வெளி வந்துகொண்டிருக்கிறது. இது trial தான். இன்னும் மெயின் picture வெளி வரவில்லை. நம் நாடு விடுதலை ஆனா 1947 ம் ஆண்டிலிருந்து 2014ம் ஆண்டு வரை உங்கள் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் நடந்த அநியாயங்கள் ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல. இதற்கிடையில் 1975 - 1976 அவசர கால சட்டம் கொண்டுவந்து அரசியல் அமைப்புச் சட்டத்தில் நாட்டு நலனுக்கு எதிராக திருத்தம் செய்தது, எதிர்க்கட்சித் தலைவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது என்று பல உள்ளன. அதைப்பற்றி விரிவாக இங்கே எழுதினால், இந்தப் பகுதியில் இடமில்லை என்று தினமலர் மறுத்துவிடும். எனவே இத்துடன் முடித்துக்கொள்கிறேன். நேரம் கிடைக்கும் போது இன்னும் கூறுவேன்.


shyamnats
நவ 04, 2025 08:19

நம் நாட்டில் குடும்ப அரசியல் ஆதிக்கம் செலுத்துவது பற்றி என்று கான் கிராஸ் கட்சியினர் , தலைவர்கள் சுய ஆராய்ச்சி செய்வது நல்ல விஷயம்தான். நேரு ஆரம்பித்து, பிரியங்கா, வாத்ரா வரை குடும்ப அரசியல் இல்லாமல் வேறு என்ன. ஏற்கனவே மக்கள் தள்ளுபடி செய்த கான் கிராஸ் கட்சி மேலும் கலகலத்து போகும்.


முக்கிய வீடியோ