மங்களூரு ஏர்போர்ட்டுக்கு மிரட்டல்
மங்களூரு: தமிழக துணை முதல்வர் உதயநிதி மனைவி கிருத்திகா மீதான வழக்கை திரும்ப பெறக் கோரி, மங்களூரு விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.மங்களூரு பஜ்பே பகுதியில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. கடந்த 30ம் தேதி விமான நிலையத்தின் மின்னஞ்சலுக்கு, 'அக்ரம் வைக்கர்' என்ற முகவரியில் இருந்து மின்னஞ்சல் வந்தது.அதில் கூறப்பட்டுள்ளதாவது:போதைப்பொருள் மன்னன் ஜாபர் சாதிக், தமிழக துணை முதல்வர் உதயநிதி மனைவியும், திரைப்படத் தயாரிப்பாளருமான கிருத்திகா மீதானவழக்குகளை உடனடியாகதிரும்பப் பெறவேண்டும்.திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு விடுதலைப் படையின் தலைவர் மாறனை விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால் விமான நிலையத்தை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.இந்த மின்னஞ்சலை பார்த்து அதிர்ச்சி அடைந்த விமான நிலைய ஊழியர்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர்.அவர்களும், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களும் இணைந்து விமான நிலையம் முழுவதும் சோதனை நடத்தினர்.ஆனால் வெடிபொருள்களோ, சந்தேகம் படும்படியான பொருட்களோ சிக்கவில்லை.வெடிகுண்டு மிரட்டல் குறித்து விமான நிலைய நிர்வாகம் அளித்த புகாரில் பஜ்பே போலீசார்விசாரிக்கின்றனர்.