உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / துப்பாக்கிமுனையில் மிரட்டல்!

துப்பாக்கிமுனையில் மிரட்டல்!

மேற்கு வங்கத்தில் கலவரம் நடந்த முர்ஷிதாபாதில், துப்பாக்கி முனையில் ஹிந்துக்களை மிரட்டி, இஸ்லாமிய கோஷங்களை எழுப்பச் சொல்லிஉள்ளனர். இது இங்கு மட்டுமல்ல, மாநிலம் முழுதும் நடக்கிறது. மேற்கு வங்கத்தில் ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை.சுகந்தா மஜும்தார்மத்திய இணை அமைச்சர், பா.ஜ.,

அதிகார துஷ்பிரயோகம்!

நேஷனல் ஹெரால்டு வழக்கில், பண மோசடி அல்லது நிதி முறைகேடு நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. காங்., தலைவர்கள் சோனியா, ராகுலை அதிகார துஷ்பிரயோகம் செய்ய வேண்டும் என்பதற்காக, இந்த வழக்கில் அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. சிதம்பரம்முன்னாள் மத்திய அமைச்சர், காங்கிரஸ்

ஹிந்துக்களை வெறுக்கும் மம்தா!

மேற்கு வங்கத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட முர்ஷிதாபாதுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி செல்லாதது ஏன்? காரணம், அவருக்கு ஹிந்துக்களை பிடிக்காது. ஹிந்துக்களை வெறுக்கிறார். இதுவே, முஸ்லிம்களுக்கு ஏதாவது ஆகியிருந்தால் போராட்டத்தில் குதித்திருப்பார்.சம்பித் பத்ராதேசிய செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை