மேலும் செய்திகள்
கார் மீது லாரி மோதிய விபத்தில் மூவர் உயிரிழப்பு
07-Oct-2026
சொகுசு கார் மோதி முதிய தம்பதி காயம்
05-Oct-2026
மீரட்: கட்டுமான பொருட்களை ஏற்றிச் சென்ற வேன், லாரி மீது மோதி மூன்று பேர் உயிரிழந்தனர். உத்தர பிரதேச மாநிலம், மீரட் மாவட்டம், டப்துவா கிராமத்தைச் சேர்ந்த சுஷில்,47, ரமேஷ்,55, மற்ரும் அமர்,30, ஆகிய மூவரும் கட்டுமான வேலை செய்து வந்தனர். நேற்று முன் தினம் இரவு, கட்டுமான தளத்துக்கு கூரை அமைக்கும் பொருட்களை ஏற்றிச் சென்ற வேனில், மூவரும் சென்றனர். மீரட் அருகே முன்னால் சென்ற லாரி மீது வேன் மோதியது. வேனில் இருந்த மூன்று தொழிலாளர்களும் அதே இடத்தில் உயிரிழந்தனர். வேன் டிரைவர் பலத்த காயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார், மூன்று உடல்களையும் உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து லாரி டிரைவரை தேடுகின்றனர்.
07-Oct-2026
05-Oct-2026