மேலும் செய்திகள்
கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தோர் கைது
26-Sep-2025
ஜனக்புரி: மேற்கு டில்லியின் ஜனக்புரியில் உள்ள ஒரு உணவக உரிமையாளரை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக கலா ஜாதேதி கும்பலைச் சேர்ந்த மூன்று பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். ஜனக்புரியில் உள்ள உணவக உரிமையாளர் ஒருவரை ஒரு கும்பல் 18ம் தேதி மிரட்டி பணம் கேட்டுள்ளது. இதுதொடர்பாக ஹரிநகர் போலீசில் அவர் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், குர்பிரீத் சிங், 37, குர்பிரீத் என்கிற மன்னி, 30, குர்ஜீத் சிங், 35, ஆகிய மூன்று பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்கள், பிரபல கலா ஜாதேதி கும்பலை சேர்ந்தவர்கள். குர்பிரீத் சிங் மீது வழிப்பறி, கொள்ளை, கொலை முயற்சி, மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட 18க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. மன்னி மீது 4க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவர்கள் இருவரும் சமீபத்தில் தான் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தனர். இந்த கும்பலிடம் இருந்து இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள், இரண்டு தோட்டாக்கள், இரண்டு ஸ்கூட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
26-Sep-2025