மூன்று நைஜீரியர்கள் துவாரகாவில் சிக்கினர்
புதுடில்லி:புதுடில்லி துவாரகாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த, நைஜீரிய நாட்டைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். தலைநகர் டில்லியில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினர் குறித்து தனிப்படை போலீசார் அதிரடி ஆய்வு நடத்தி வருகின்றனர். அண்டை நாடான வங்கதேசத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், துவாரகாவில் தங்கியிருந்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலக உத்தரவுப்படி நரேலா லம்பூரில் உள்ள நாடுகடத்தல் முகாமுக்கு அனுப்பப்பட்டனர்.