பயங்கரவாதிகளுடன் மோதல் மூன்று போலீசார் உயிரிழப்பு
ஜம்மு: ஜம்மு - காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள சன்யால் வனப்பகுதியில் ஐந்து பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக நேற்று பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காஷ்மீர் போலீசார் மற்றும் பாதுகாப்புடையினர், பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை சுற்றி வளைத்தனர்.இருதரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்; காஷ்மீர் போலீசார் மூவர் வீர மரணமடைந்தனர். இதையடுத்து, அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.