உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லைசென்ஸ் பெறுவதற்காக பஸ் ஓட்டிக் காட்டிய திருச்சூர் கலெக்டர்; பாராட்டும் நெட்டிசன்கள்

லைசென்ஸ் பெறுவதற்காக பஸ் ஓட்டிக் காட்டிய திருச்சூர் கலெக்டர்; பாராட்டும் நெட்டிசன்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சூர்: கேரளாவில் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக வட்டார போக்குவரத்து அலுவலர் முன்னிலையில் திருச்சூர் கலெக்டர் பஸ் ஓட்டிக் காண்பித்தார். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்ட கலெக்டராக இருப்பவர் அர்ஜூன் பாண்டியன். இவர் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இதையொட்டி, பஸ்ஸை ஓட்டிக் காட்டுவதற்காக கலெக்டர் அர்ஜூன் பாண்டியனுக்கு அழைப்பு வந்தது. அதன்பேரில், வட்டார போக்குவரத்து அலுவலர் முன்னிலையில் கலெக்டர் அர்ஜூன் பாண்டியன் பஸ்ஸை ஓட்டிக் காண்பித்தார். இது தொடர்பான வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்திருந்தார். இது வைரலான நிலையில், பலரும் அவருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். கலெக்டராக இருந்தாலும், போக்குவரத்து விதிகளுக்கு உட்பட்டு, பஸ்ஸை ஓட்டிக் காண்பித்து ஓட்டுநர் உரிமம் பெறுவது, மற்றவர்களுக்கும் சிறந்த முன்னுதாரணம் என்று நெட்டிசன்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

யார் இந்த அர்ஜூன் பாண்டியன்?

இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் - உஷா குமாரி தம்பதியினரின் மகனாவார். இவர், திருவனந்தபுரம் கிளிமானூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்தார். கொல்லத்தில் உள்ள டி.கே.எம்., பொறியியல் கல்லூரியில் பிடெக் பட்டம் பெற்றார். 2017 பேட்ச் கேரளா கேடர் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாவார்.தலைமை செயலக பணியாளர் அதிகாரி, தொழிலாளர் ஆணையர், கண்ணூர் உதவி அதிகாரி உள்ளிட்ட பல பதவிகளை வகித்துள்ளார். 2019ல் ஒத்தப்பாலம் சப்-கலெக்டராகவும் பணியாற்றியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Ramesh Sargam
மார் 27, 2025 20:32

நாங்கெல்லாம் லஞ்சம் கொடுத்துதான் உரிமம் பெறுவோம். அல்லது சிபாரிசு கடிதம் கொடுத்து பெறுவோம். பிழைக்கத்தெரியாத கலெக்டர்.


தமிழன்
மார் 27, 2025 17:47

வாழ்த்துக்கள் ஆனால் இந்த கலியுகத்தில் நேர்மைக்கு இடமில்லை விரைவில் ஏதாவது பாலைவனத்துக்கு உங்களை கலெக்டராக பார்க்க முடியும் என்று நினைக்கிறேன் எதற்கும் ரெடியாக இருங்கள்


Perumal Pillai
மார் 27, 2025 16:43

Publicity stunt.


தமிழன்
மார் 27, 2025 17:43

உனக்கெல்லாம் நேர்மையாக இருப்பவனை பார்த்தால் கிண்டல் செய்யத்தான் தோன்றும் நீ சங்கி குடும்பத்தை சேர்ந்தவன் இப்படித்தான் உன் புத்தி இருக்கும்


JAYACHANDRAN RAMAKRISHNAN
மார் 27, 2025 16:00

டிரைவிங் ஸ்கூல் மூலமாக தான் எல் எல் எல் ஆர் பெற்று ஓட்டிக் காட்டினால் தான் ஆர்டிஓ ஆபிசர் ஒத்துக் கொள்வார்கள். இவருக்கு எப்படி என்று தெரியவில்லை.


Varadarajan Nagarajan
மார் 27, 2025 15:18

இந்தக்காலகட்டத்தில் இதுபோன்ற பதவிகளில் இருப்பவர்கள் யாரும் இப்படி நடந்துகொள்வதில்லை என்பதால் இவரது செயல் பலரது பாராட்டுகளை பெறுகின்றது. இல்லையென்றால் இந்த நடைமுறை அனைவராலும் கட்டாயம் கடைபிடிக்கவேண்டிய ஒன்றுதான். சட்டம் அனைவருக்கும் சமம் என்று எடுத்துக்கொண்டால் இவரது செயல் சாதாரணமானதுதான். அப்படி இல்லையென்றால் நிச்சயம் இவரது செயலை நாம் பாராட்டத்தான் வேண்டும்


முக்கிய வீடியோ