உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹிந்து அல்லாத 18 ஊழியர்கள் மீது திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை

ஹிந்து அல்லாத 18 ஊழியர்கள் மீது திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பதி: ஹிந்து அல்லாத மத நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக, 18 ஊழியர்கள் மீது திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்துள்ளது.பி.ஆர்.நாயுடு தலைமையிலான திருப்பதி தேவஸ்தான வாரியம், ஹிந்து ஊழியர்கள் மட்டுமே இங்க பணியாற்ற முடியும் என்று முன்பு கூறியிருந்தது. இவ்வாறு இருந்த போதிலும், இந்த 18 ஊழியர்கள் ஹிந்து அல்லாத மரபுகளைப் பின்பற்றுவது கண்டறியப்பட்டது. இதனடிப்படையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து திருப்பதி தேவஸ்தான வாரியம் தெரிவித்துள்ளதாவது:எங்கள் வாரியத்தின் தீர்மானத்தின்படி, கோவில்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் உள்ள இந்த 18 பேர், தற்போதைய பணிகளில் இருந்து நீக்கப்படுவார்கள். ஊழியர்களுக்கு இரண்டு விருப்பங்கள் வழங்கப்படுகின்றன. அரசுத் துறைகளுக்கு மாற்றுதல் அல்லது தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்திற்கு விண்ணப்பித்தல் ஆகிய வாய்ப்புகள் வழங்கப்படும்.1989ம் ஆண்டு அறக்கட்டளைச் சட்டத்தின்படி, திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் ஹிந்து பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.பாஜக தலைவரும் தேவஸ்தான வாரிய உறுப்பினருமான பானு பிரகாஷ் ரெட்டி இந்த நடவடிக்கையை ஆதரித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Nandakumar Naidu.
பிப் 05, 2025 22:47

இதே போல, முக்கியமாக தமிழகத்தில் செயல்படுத்த வேண்டும். இந்த ஹிந்து விரோத ஆட்சியை தூக்கி சாக்கடையில் வீச வேண்டும்.


Haja Kuthubdeen
பிப் 05, 2025 21:42

நல்ல முடிவு...


Vijay
பிப் 05, 2025 21:24

ஆண்மை உள்ள அரசாங்கம்


Thiagaraja boopathi.s
பிப் 05, 2025 21:15

அற்புதமான முடிவு


Bvanandan
பிப் 05, 2025 20:45

Immediate such action required is required in all Hindu Temple in Tamilnadu


Rajan A
பிப் 05, 2025 20:32

இப்ப புரியுதா ரெட்டி தில்லாலங்கடி வேலை. தமிழ்நாட்டில் எவ்வளவோ?


sankaran
பிப் 05, 2025 20:25

இப்போதான் ஹிந்து கொஞ்சம் கண்ண தொறந்து பார்க்கிறான்... முழுசும் தொறந்தாதான் நிம்மதி...


T.sthivinayagam
பிப் 05, 2025 20:12

ஹிந்துக்கள் அனைவரும் இறைவனுக்கு இறை சேவை செய்ய விடாமல் ஆன்மீக பாகுபாட்டை ஏற்படுத்தி ஹிந்துக்களை வேறுபடுத்த நினைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்து தலைவர்கள முன்வர வேண்டும்


sridhar
பிப் 05, 2025 21:59

என்ன உளறல் இது. கிறிஸ்துவத்துக்கு போனவன் எப்படி ஹிந்து ஆன்மீக சேவை செய்வான் .


Kumar Kumzi
பிப் 06, 2025 02:44

சோத்துக்கு வக்கில்லாம மதம் மாறிய பாவாட்ஸ் ஒனக்கு இங்க என்ன வேல


Mohammad ali
பிப் 05, 2025 20:05

சரியான ஆண்மைதனமான முடிவு. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களையும் நீக்க வேண்டும்.


vijai hindu
பிப் 05, 2025 20:02

பாராட்டுகள் அதே மாதிரி இந்த கோயில்களில் ஹிந்து மதத்தினர் தவிர வேற மதத்தினரை உடனடியாக வெளியேற்ற வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை