உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சபரிமலை ஓட்டல் பற்றிய புகாருக்கு இலவச தொலைபேசி எண்

சபரிமலை ஓட்டல் பற்றிய புகாருக்கு இலவச தொலைபேசி எண்

சபரிமலை:சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு நல்ல உணவு கிடைக்காத பட்சத்தில் புகார் அளிக்க இலவச தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.சபரிமலையில் மற்றும் செல்லும் பாதைகளில் உள்ள ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலையை பத்தனம்திட்டை மாவட்ட கலெக்டர் நிர்ணயித்து அதற்கான பட்டியலை பெரிய அளவில் போர்டாக வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். எனினும் பல ஓட்டல்களிலும் இது வைக்கப்படுவதில்லை. கூட்டத்திற்கு ஏற்ப உணவுக்கு விலை மாற்றும் நிலை காணப்படுகிறது. மேலும் கெட்டுப்போன பொருள்களும் பக்தர்கள் தலையில் கட்டப்படுகிறது.இதை கட்டுப்படுத்துவதற்காக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தொடர்ந்து பரிசோதனை நடத்தி அபராதமும் விதித்து வருகின்றனர். எனினும் பக்தர்கள் ஏமாற்றப்படுவது தொடர்கிறது. இதைத்தொடர்ந்து பக்தர்கள் தங்கள் புகாரை தெரிவிக்க கேரள உணவு பாதுகாப்புத்துறை அலைபேசி எண்களை அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ