உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஹல்காமில் மீண்டு வரும் சுற்றுலா: பாதுகாப்பு உள்ளதாக பயணிகள் மகிழ்ச்சி

பஹல்காமில் மீண்டு வரும் சுற்றுலா: பாதுகாப்பு உள்ளதாக பயணிகள் மகிழ்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமிற்கு சுற்றுலா பயணிகள் மீண்டும் வர துவங்கி உள்ளனர். அங்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளனர்.ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து 92 கி.மீ., தொலைவில் கடல் மட்டத்தில் இருந்து 2,740 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது பஹல்காம். காஷ்மீரின் 'மினி சுவிட்சர்லாந்து' என அழைக்கப்படும் இந்தப் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருவது வழக்கம். இச்சூழ்நிலையில் கடந்த ஏப்.,22 அன்று அங்கு வந்த பயங்கரவாதிகள், சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்தினர். குறிப்பாக அவர்களின் மதத்தைக் கேட்டு பிறகு சுட்டுக் கொன்றனர்.நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் மீது மட்டும் இந்தியா தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்தியாவின் ராணுவ நிலைகள் மற்றும் அப்பாவி மக்கள் வசிக்கும் பகுதிகளில் தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து அந்நாட்டின் விமானப்படை மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தவே, பாகிஸ்தான் போர் நிறுத்தம் வேண்டும் என கெஞ்சியது. இதனை இந்தியா ஏற்றுக் கொண்டதால் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.பயங்கரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து, பஹல்காமிற்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. இதனால், சுற்றுலா பயணிகளை நம்பியிருந்த குதிரை ஓட்டிகள், மற்றும் வழிகாட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வரும்காலத்தில் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்து இருந்தனர்.தற்போது, அடுத்தகட்டமாக அமர்நாத் யாத்திரைக்கான ஏற்பாடுகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் செய்து வருகின்றன. பஹல்காம் வழியாக இந்த யாத்திரை நடைபெறுவதால் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.இந்நிலையில், பஹல்காமுக்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த பகுதிக்கு வருபவர்கள், அப்பகுதியின் அழகை ரசிப்பதுடன், குதிரை சவாரி செய்து மகிழ்கின்றனர்.இது தொடர்பாக மும்பையை சேர்ந்த சோனாலி என்பவர் கூறுகையில், இந்த பகுதியில் பருவநிலை நன்றாக உள்ளது. சுற்றுலா வருவோரின் பாதுகாப்புக்காக போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அனைவரும் ஜம்மு காஷ்மீர் வந்து அதன் அழகை ரசித்து செல்ல வேண்டும். நாங்கள் பல இடத்திற்கு சென்றதுடன், குதிரை சவாரியும் செய்தோம். பஹல்காம் வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இப்பகுதி மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Kulandai kannan
ஜூன் 30, 2025 08:24

நாகப் பாம்புகளை நம்ப முடியாது.


Bhakt
ஜூன் 29, 2025 22:50

JK tourists should be provided stun gun on arrival for self-defense.


திகழ்ஓவியன்
ஜூன் 29, 2025 21:27

இப்ப இருக்கும் பாதுகாப்பு அப்போ செய்து இருந்தால் 29 பேர் நம்முடன் இருந்து இருப்பார்கள்.கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்


ديفيد رافائيل
ஜூன் 29, 2025 21:20

420km தரைவழியாகவே தாக்குதல் நடத்தி போயிருக்கானுங்க. இதுலருந்தே தெரியல இந்திய ராணுவத்தோட பாதுகாப்பு லட்சணம்.


sundarsvpr
ஜூன் 29, 2025 20:29

அரசு பாதுகாப்பு ஏற்பாடு செய்ததால் மகிழ்ச்சி.


mindum vasantham
ஜூன் 29, 2025 20:20

வெள்ளையர் ஆதிக்கம் உலகில் முடிவுறுகிறது.நம்மூரிலும் வெள்ளையாக இருப்பவன் தான் அறிவாளி என்ற எண்ணம் உள்ளது.


Ramesh Sargam
ஜூன் 29, 2025 20:15

எதற்கும் அதிகாரிகள் மிக மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும். மீண்டும் அப்படி ஒரு படுகொலை நிகழ்வுக்கு இடம் கொடுக்காதீர்கள். சந்தேகமானவர்களை பிடித்து சிறையில் அடைக்கவும்.