உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நவ., 25, 26ல் போக்குவரத்து மாற்றம்

நவ., 25, 26ல் போக்குவரத்து மாற்றம்

பெங்களூரு: பெங்களூரில் பிரசித்தி பெற்ற பசவனகுடி கடலைக்காய் திருவிழா நடக்கவுள்ளது. இதை முன்னிட்டு பல சாலைகளில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.பெங்களூரு பசவனகுடியின், தொட்ட பசவண்ண கோவில் வளாகத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம், கடைசி திங்கட்கிழமை முதல் இரண்டு நாட்கள் கடலைக்காய் திருவிழா கோலாகலமாக நடக்கும். லட்சக்கணக்கான மக்கள் வருவர்.அதன்படி, நாளை மற்றும் நாளை மறுநாள் பிரசித்தி பெற்ற கடலைக்காய் திருவிழா நடக்கவுள்ளது.மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்கள், அண்டை மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள், வியாபாரிகள் கடலைக்காயை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். ஏற்கனவே கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இரண்டு நாட்களும் மக்கள் மிக அதிகமாக வரக்கூடும். எனவே போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து, பெங்களூரு போக்குவரத்து போலீஸ் துறை வெளியிட்ட அறிக்கை:வழக்கம் போன்று இம்முறையும், லட்சக்கணக்கான மக்கள் வருகை தரும் வாய்ப்புள்ளது. எனவே புல் டெம்பிள் சாலை உட்பட, பல சாலைகளில் வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி