வாசகர்கள் கருத்துகள் ( 2 )
கதி சக்தி ஹை. போட்டுத் தள்ளுது ஹை.
..........
பெங்களூரு: கர்நாடகாவில் லாரி கவிழ்ந்து பயங்கர விபத்து ஏற்பட்டத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.கர்நாடகாவின் உத்தர கன்னட மாவட்டத்தில், 25 பேருடன், காய்கறிகளை ஏற்றிக் கொண்டு வந்த லாரி விபத்தில் சிக்கியது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது விசாரணையில் தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் தீவிரமாக மீட்பு பணி கொண்டனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ec23umpg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த விபத்தில், 10 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 15 பேர் பலத்த காயமுற்றனர். காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கதி சக்தி ஹை. போட்டுத் தள்ளுது ஹை.
..........