உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / என் நண்பர் அதிபர் டிரம்புக்கு நன்றி; ட்ரூத் சோஷியல் மீடியாவில் இணைந்த மோடி பதிவு

என் நண்பர் அதிபர் டிரம்புக்கு நன்றி; ட்ரூத் சோஷியல் மீடியாவில் இணைந்த மோடி பதிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு சொந்தமான ட்ரூத் சோஷியல் மீடியாவில் பிரதமர் மோடி இணைந்தார். அமெரிக்க தொகுப்பாளர் லெக்ஸ் பிரிட்மேனுடன், பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை 3 மணி நேரம் கலந்துரையாடினார். அப்போது, 'டிரம்ப் துணிச்சலானவர்; சுயமாக முடிவெடுப்பவர்' என்று பிரதமர் புகழாரம் சூட்டினார். இந்த வீடியோவை டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக ஊடக கணக்கில் பகிர்ந்தார். இது குறித்து ஆங்கில மீடியாக்களில் செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது.இந்நிலையில், அதிபர் டொனால்டு டிரம்பிற்கு சொந்தமான ட்ரூத் சோஷியல் மீடியாவில் பிரதமர் மோடி இணைந்தார். தனது முதல் பதிவில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: ட்ரூத் சோஷியல் மீடியாவில் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வரவிருக்கும் காலங்களில் இத்தளத்தில் ஆக்கபூர்வ உரையாடல்களில் ஈடுபட எதிர்பார்ப்புடன் உள்ளேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.தனது கலந்துரையாடல் வீடியோவை பகிர்ந்த டிரம்புக்கு நன்றி தெரிவித்து வெளியிட்ட மற்றொரு பதிவில், 'எனது நண்பர் அதிபர் டிரம்ப்புக்கு நன்றி. எனது வாழ்க்கைப் பயணம், உலகளாவிய பிரச்னைகள் என பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியுள்ளேன்' என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Easwar Kamal
மார் 18, 2025 17:42

நீ எனக்கு நண்பானா அப்படினா வரி இன்னும் ஏத்துவோம்னு தான் பார்ப்பாரு நம்ம டிரம்ப். டிரம்ப்–க்கு நண்பன் எதிரி எல்லாம் ஒண்ணுதான். எவன் பணம் கொட்டுறானோ அவன் தான் நண்பன்.


Michael Gregory
மார் 18, 2025 15:14

ஒரேயடியாக டிரம்ப் மற்றும் எலன் மாஸ்க் கிடம் அடிபணிந்து விட்டார். ஸ்டார்லிங்க் ஒப்பந்தம் கையெழுத்து ஆகிவிட்டது. டிரம்ப்ன் வரிவிதிப்பு திட்டத்திற்கு பயந்து அதி விரைவில் வரி குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படும். கேட்டால் ராஜதந்திரம் என்பது.


Naga Subramanian
மார் 18, 2025 12:25

சிறிது காலத்திற்கு, ஆடற மாட்டை ஆடித்தான் கறக்க வேண்டும்.


अप्पावी
மார் 18, 2025 11:26

டோட்டல் சரண்டர்... இது ஒண்ணும் அமெரிக்க அதிபரின் தளம் அல்ல. ட்ரம்பின் துதிபாடிகள், அவரால் ஆதாயம் அடைபவர்களால் நடத்தப்படுகிறது. அதில் தனி மனிதராக சேரலாம். பிரதமாரகச் சேர்ந்தால் அது தனிப்பட்ட ஆதாயத்திற்காகத்தான்.


GoK
மார் 18, 2025 12:34

பிரதமருக்கு அதுவும் மோடிக்கு என்ன அய்யா தனிப்பட்ட ஆதாயம் கொஞ்சம் விளக்குங்களேன்


Madras Madra
மார் 18, 2025 12:41

ஏன் புரளி கிளப்புறீங்க


ஆரூர் ரங்
மார் 18, 2025 10:38

டிரம்ப் அதிரடிக் கொள்கை முடிவுகளால் அமெரிக்காவிற்கு கேடு விளைவித்து வருகிறார். இதனை நமது நாடு பயன்படுத்தி முன்னேற வேண்டும். இப்போதெல்லாம் ஒட்டு மொத்த உலக நன்மை பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.


Mecca Shivan
மார் 18, 2025 09:52

இந்த முறை ட்ரம்ப் அவ்வளவு சாதகமாக இருப்பர் என்ற நம்பிக்கை இல்லை.. அவரும் திராவிட அரசியல் செய்து அமெரிக்காவில் குப்பை கொட்ட வேண்டி உள்ளதால் இந்த முறை அவர் ஒரு உலகளவில் அதிபராக இருக்ககூடிய சாத்தியம் மிக மிக குறைவு


கிஜன்
மார் 18, 2025 08:59

வாழ்த்துக்கள் .... அதிபர் டிரம்ப் ... பிரதமரை மிகவும் நம்புகிறார் .... இருவருமே அவரவர் நாடுகளுக்கு முன்னிலை கொடுப்பவர்கள் .... உலகம் நன்மை பெற வாழ்த்துக்கள் ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை