உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உண்மையை மறைக்க முடியாது: பார்லி விவாதத்தில் பிரியங்கா பேச்சு

உண்மையை மறைக்க முடியாது: பார்லி விவாதத்தில் பிரியங்கா பேச்சு

புதுடில்லி: '' மக்களின் பாதுகாப்புக்கு பிரதமர், உள்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு பொறுப்பு இல்லையா? நீங்கள் எத்தனை நடவடிக்கை எடுத்தீர்கள் என்பது பிரச்னையில்லை. உண்மையை உங்களால் மறைக்க முடியாது,'' என லோக்சபாவில் 'ஆபரேஷன் சிந்தூர்' மீதான விவாதத்தில் காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா பேசினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wxc3lqhj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவர் பேசியதாவது: நேற்று ஒரு மணி நேரம் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒரு மணி நேரம் பேசினார். பயங்கரவாதம், நாட்டின் பாதுகாப்பு பற்றி பேசியதுடன், வரலாற்று பாடம் எடுத்தார். ஆனால், ஒரு விஷயத்தை தவற விட்டுவிட்டார். இந்த தாக்குதல் நடந்தது எப்படி?பொறுப்பு இல்லையாதாக்குதல் நடந்த இடத்தில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒரு வீரர் கூட இல்லாதது ஏன்?குடிமக்களின் பாதுகாப்புக்கு பிரதமர், உள்துறை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சருக்கு பொறுப்பு இல்லையா? பஹல்காம் தாக்குதல் சம்பவத்துக்கு டிஆர்எப் அமைப்பு பொறுப்பு ஏற்றது. 2020 முதல், 2025 ஏப்., வரை செயல்பட்டது. 2024ல் ரியாஸி பகுதியில் நடந்த தாக்குதல் உட்பட 25 பயங்கரவாத தாக்குதல்களை இந்த அமைப்பு அரங்கேற்றி உள்ளது. 2023 ல் டிஆர்எப் அமைப்பை மத்திய அரசு பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது. ஐபி பலனாய்வு அமைப்பு தலைவர் ராஜினாமா செய்தாரா? வேறு யாரும் ராஜினாமா செய்தனரா ? புலனாய்வு பிரிவு உள்துறை அமைச்சகம் கீழ் வருகிறது. அமித்ஷா ராஜினாமா செய்தாரா? தலைமை என்பது பெருமையை மட்டும் ஏற்பது இல்லை. பொறுப்பு ஏற்க வேண்டும். மணிப்பூர் பற்றி எரியும் போதும், டில்லியில் கலவரம் நடந்த போதும், பஹல்காமில் தாக்குதல் நடந்த போதும், அமித்ஷா பதவியில் இருக்கிறார்.யாரும் இல்லைஇங்கு இருக்கும் அனைவருக்கும் பாதுகாப்பு இருக்கிறது. ஆனால், பஹல்காமில் 26 பேர் அவர்களின் குடும்பத்துக்கு முன்னர் கொல்லப்பட்டனர். சம்பவம் நடந்த இடத்தில் பாதுகாப்புக்கு யாரும் இல்லை. நீங்கள் எத்தனை நடவடிக்கை எடுத்தீர்கள் என்பது பிரச்னையில்லை. உண்மையை உங்களால் மறைக்க முடியாது.கேள்விகளில் இருந்து தப்பிக்கவே அரசு முயற்சி செய்கிறது. நாட்டு மக்கள் பாதுகாப்பில் பொறுப்பேற்க மறுக்கிறது. அவர்களின் மனதில் மக்கள் இல்லை என்பதே உண்மை. அவர்களை பொறுத்தவரை அனைத்தும் விளம்பரத்துக்காகவும், அரசியலுக்காகவும் செய்யப்படுகின்றன. தாயார் கண்ணீர்நீங்கள் வரலாற்றை பற்றி பேசுகிறீர்கள். நான் தற்போதைய நிலைமை பற்றி பேசுகிறேன். நீங்கள் எப்போதும் மன்னிப்பை எதிர்பார்க்கிறீர்கள். நீங்கள் சோனியா குடும்பத்தினரை பட்டியல் இடுகிறீர்கள். நீங்கள் தான் 11 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கின்றீர்கள். நேற்று , காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகோய், '' உள்துறை அமைச்சருக்கு பொறுப்பு இல்லையா'' என கேள்வி எழுப்பினார். அதற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் தலையசைத்தார்.உள்துறை அமைச்சர் சிரிக்கிறார்.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எனது தாயாரின் கண்ணீர் பற்றி இன்று பேசினார். இதற்கு நான் பதிலளிக்க விரும்புகிறேன். எனது தந்தையை பயங்கரவாதிகள் கொன்ற போது , எனது தாயார் கண்ணீர் விட்டார். இன்று நான், பஹல்காமில் உயிரிழந்த 26 பேரின் உணர்வுகளை பற்றி பேசுகிறேன் என்றால், அவர்களின் வேதனையை புரிந்து கொண்டதால் தான். இவ்வாறு பிரியங்கா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

M Ramachandran
ஜூலை 29, 2025 22:14

ஆம் உண்மை. எந்த நேரத்தில் வாயை திறந்தாயோ பாராளுமன்றத்தில் உன் தாத்தாவை நாரா அடிக்கிராங்க


Rathna
ஜூலை 29, 2025 21:07

பாதுகாப்பு வீரர்கள் ஒவ்வரு முறையும் 100 க்கு 100 சரியாக இருக்க வேண்டும் தீவிரவாதிகளை வேட்டையாட? ஆனால் தீவிரவாதிகள் 100 இல் ஒரு முறை சரியாக இருந்தால் போதும் ஒரு அப்பாவியை கொல்ல. இதனால் தான் அமெரிக்கா போன்ற வல்லரசும் பைத்தியகார தீவிரவாதி கூட்டத்தை தன் நாட்டிலேயே கட்டுப்படுத்த முடியவில்லை.


Ramesh Sargam
ஜூலை 29, 2025 20:36

ஆம் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது இந்தியாவில் நடந்த பல அட்டூழியங்களையும், ஊழல்களையும் மறைக்கவே முடியாது.


Bhakt
ஜூலை 29, 2025 19:57

பப்பி பப்புவோட ஜாஸ்தி மக்கு


M Kannan
ஜூலை 29, 2025 19:52

Yes, italin frauds are not able to hide themselves for long...


kumar
ஜூலை 29, 2025 19:17

present sir


theruvasagan
ஜூலை 29, 2025 18:47

இந்திராகாந்தி இறந்தபோது ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டபோது உங்க போலிஸ் எங்கே இருந்து. பாதுகாக்க என்ன செய்தது.


Karthik Madeshwaran
ஜூலை 29, 2025 18:43

மணிப்பூர் பற்றி எரியும் போதும், டில்லியில் கலவரம் நடந்த போதும், பஹல்காமில் தாக்குதல் நடந்த போதும், அமித்ஷா பதவியில் இருக்கிறார் வெட்கமாக இல்லையா ?. இப்படி எல்லாம் பளார் பளார் என்று செவிட்டில் அறைந்த மாதிரி கேள்வி கேட்டால், இங்குள்ள பாஜக அடிமைகள் அப்போ காங்கிரஸ் ஆட்சில அங்க கலவரம் நடந்துச்சு, இங்க குண்டு வெடிச்சிச்சினு தான் குத்தம் சொல்லி, டாபிக் மாத்தி பேசி ஊரை ஏமாத்துவானுங்க. தான் ஆட்சியில நடந்த தப்ப ஒத்துக்குவே மாட்டாங்க. யோக்கியன் மாதிரி நடிப்பாங்க. கடைசி வரைக்கும் பிரியங்கா கேட்ட நியாயமான கேள்விக்கு பதிலே வராது.


Ravi Manickam
ஜூலை 29, 2025 19:15

ஆமாம் கொத்தடிமையே இதைதான் தமிழ்நாட்டு மக்களுக்கு சுடலையை பார்த்து கேட்கிறார்கள் உன் பதில் என்ன?


Svs Yaadum oore
ஜூலை 29, 2025 19:27

வடக்கன் பானிபூரி பீடாவாயன் என்று பேசிய விடியலுக்கு இப்பொது மணிப்பூர் என்றால் மட்டும் எப்படி மத சார்பின்மையாக விடியலுக்கு கண்ணில் அப்படியே தண்ணீர் வடியுது ??....


Karthik Madeshwaran
ஜூலை 29, 2025 19:38

கேட்ட கேள்விக்கு பதில் இருக்கா ? என்னை பிறகு திட்டி கொள்ளுங்கள்.


vivek
ஜூலை 29, 2025 20:06

உனக்கு பகலிலேயே பசுமாடு தெரியாது....எதுக்கு மொக்கை கருத்து மா கேசு....


vivek
ஜூலை 29, 2025 20:07

இவன் தான். புது அவதாரம் ஓவிய மா கேசு


Sudha
ஜூலை 29, 2025 21:37

இவை எல்லாமே வெளிநாட்டு தூண்டுதலால் நடந்தவை. இதை கூட ஒப்புக்காத காங்கிரஸ். ஆம் இத்தனை மோசக்காரர்களுக்கு ஒரு மோடி அமித் ஷா, ராஜ்நாத் போதவில்லை தான்.


Ramanujam Veraswamy
ஜூலை 29, 2025 18:27

1971 Indo-Pak war, Indias unparalleled victory speaks of valour and courage of India. No match in World history.


cpv s
ஜூலை 29, 2025 18:18

you all are safely staying in india by looted india money, then speaking about our india, first cancel her citizenship send out from india


புதிய வீடியோ