உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி குண்டுவெடிப்புக்கு துருக்கியில் பிளான்: என்ஐஏ விசாரணையில் திடுக் தகவல்

டில்லி குண்டுவெடிப்புக்கு துருக்கியில் பிளான்: என்ஐஏ விசாரணையில் திடுக் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 12 பேரை பலி கொண்ட டில்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கான திட்டம் துருக்கியில் தீட்டப்பட்டு இருக்கலாம் என்பது என்ஐஏ புலனாய்வு விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.தலைநகர் டில்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு தாக்குதல் குறித்து என்ஐஏ தமது அதிகாரப்பூர்வ விசாரணையை தொடங்கி இருக்கிறது. முதல் கட்டமாக, இந்த திட்டம் எங்கே தீட்டப்பட்டது, திட்டமிடலில் ஈடுபட்டவர்களின் தகவல் தொடர்புகள் எப்படி இருந்தது என்பது பற்றிய விசாரணையில் என்ஐஏ இறங்கியது.இதில் கிடைக்கப் பெற்ற தகவல்கள் வருமாறு; குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், 2 டெலிகிராம் குழுக்கள் மூலம் தகவல் பரிமாற்றம் நடத்தி இருக்கின்றனர். இந்த தகவல் தொடர்பு தான் அவர்களின் திட்டமிடலில் முக்கிய புள்ளியாக இருந்துள்ளது. பர்சான்தான்-இ-தாருல் உலும் மற்றும் பாகிஸ்தானை தளமாக கொண்ட ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் கமாண்டர் உமர் பின் கட்டாப் நடத்தி வரும் மற்றொரு டெலிகிராம் குழுக்கள் இடையே நடைபெற்ற உரையாடல்கள் இதை உறுதிப்படுத்துகின்றன. இந்த இரு டெலிகிராம் குழுக்களில் ஏதேனும் ஒரு குழு மூலம் பயங்கரவாதி டாக்டர் உமர் நபி, சோபியானைச் சேர்ந்த இமான் இர்பான் அகமது வாஹா ஆகிய இருவரும் தகவல்களை பரிமாறி இருக்கின்றனர்.காஷ்மீர் ஆசாதி மற்றும் காஷ்மீர் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் என்ற இரு புள்ளிகளை மையப்படுத்தி தான் உரையாடல்கள் தொடங்கி, பின்னர் சர்வதேச பயங்கரவாதம், உலகளாவிய ஜிகாத் மற்றும் பழிவாங்குவது என்ற செயல்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இந்த டெலிகிராம் குழுக்கள் மூலம் உரையாடிய பயங்கரவாதிகள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு இருக்கின்றனர். அங்கு சில நபர்களை சந்தித்தும் இருக்கின்றனர். இதில் குறிப்பாக அவர்களின் துருக்கி பயணமே டில்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை அரங்கேற்ற வேண்டும் என்ற முக்கிய புள்ளியாக இருந்திருக்கலாம் கருதப்படுகிறது.துருக்கி பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பிய பின்னரே, இந்த குழுவினர், தங்களின் பயங்கரவாத நெட்வொர்க்கை விரிவுபடுத்தி உள்ளனர். டாக்டர் முசாம்மில் பரிதாபாதில் உள்ள அல்பலா மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளான். மற்றொரு டாக்டர் அடில் சஹாரன்பூரில் பணியமர்த்தப்பட்டான்.மற்ற பயங்கரவாதிகள், ஆட்களைச் சேர்த்தல், பயங்கரவாத சம்பவங்களுக்கு தேவையான தளவாடங்களை வெவ்வேறு மாநிலங்களுக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகளை செய்ய தொடங்கி உள்ளனர். இந்த செயல்களில் ஈடுபட்ட அனைவரையும் என்ஐஏ குழுவினர் அடையாளம் கண்டுள்ளனர்.டில்லி குண்டுவெடிப்பை அரங்கேற்றியதாக சந்தேகிக்கப்படும் டாக்டர்கள் உமர், முசாமில், ஷாஹீன் ஆகியோருடன் சேர்ந்து 5 முதல் 6 மருத்துவர்கள் உள்பட 9 முதல் 10 பேர் கொண்ட பயங்கரவாத நெட்வொர்க்கின் ஒரு பகுதியாக இருந்துள்ளனர். இந்த 3 பேரும், தங்கள் தொழிலான டாக்டர் என்ற அடையாளத்தை கொண்டு, வெடிபொருட்களை வாங்கி ஒன்று சேர்த்துள்ளனர்.இவ்வாறு என்ஐஏ விசாரணையில் புதிய தகவல்கள் கிடைக்கப் பெற்று இருக்கின்றன. டில்லி குண்டுவெடிப்பு விசாரணை துருக்கி வரை நீண்டுள்ள உள்ள அதே தருணத்தில் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்த நாளில் மதியம் 3 மணி முதல் மாலை 6.30 மணி வரை டாக்டர் உமர் யாரை தொடர்பு கொண்டான் என்பதை கண்டறிய செங்கோட்டை பகுதியில் உள்ள செல்போன் டவரை என்ஐஏ அதிகாரிகள் குழு ஆராய்ந்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 12, 2025 19:12

வாழும் நாட்டிற்கு இப்படியொரு துரோகம் ......


Vijayasekar
நவ 12, 2025 19:08

கபில் சிபல் , சிங்க்வி , பிரசாந்த் பூஷன் , இந்திரா ஜெய்சிங் போன்ற வக்கீல்கள் இவர்களுக்கு வாதாட வருவார்கள்


திகழ்ஓவியன்
நவ 12, 2025 18:55

அப்போ உளவு துறை ?


என்னத்த சொல்ல
நவ 12, 2025 18:26

சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு சந்தி சிரிக்கிறது.


RK
நவ 12, 2025 18:20

முதலில் உள்ளூர் பக்கிகளை களை எடுக்க வேண்டும்.


Vasan
நவ 12, 2025 18:14

சமீப காலத்தில் துருக்கிக்கு பயணம் செய்த அனைவரையும் ரகசியமாக கண்காணிக்க வேண்டும், விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும். இது நியாயமான பலருக்கு இடைஞ்சலாக இருந்தாலும், ஒரு பெரிய விசாரணைக்கு ஒத்துழைப்பதாக கருத வேண்டும்.


V Venkatachalam, Chennai-87
நவ 12, 2025 18:04

டாக்டர்களை கண்கண்ட தெய்வமாக பார்க்கிறோம். உயிர் காக்கும் சேவையில் ஈடுபடும் அவர்களின் மகத்துவம் ஒரு நோயாளிக்கே நன்கு தெரியும்.அப்பேர்பட்ட மகத்தான டாக்டர்கள் இந்த மாதிரி கேவலமான வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை ஜீரணிக்கவே முடியவில்லை. உயிர் காக்கும் அவர்களின் மகத்துவத்தை இந்த கேவல பிறவிகள் நாசமாக்கி விட்டனர். அழியாத அவமானத்தை தேடி தந்து விட்டனர். அமித் ஷா ஜி அவர்கள் இவர்களை சுட்டு தள்ள உத்தரவிட்டதால் கசாப் ஐ யாருக்கும் தெரியாமல் தீர்த்து கட்டியது போல் ஓவர் நைட் முடித்து விட வேண்டும். மனம் பதறுகிறது. பாவிகள்.


Vaithiyanathan Vaduvarasan
நவ 12, 2025 18:01

இந்த நாசமா போன நாய்கள்க்கு இந்தியா என்ன துரோகம் செய்தது? ? இந்தியாவில் வாழ்கை பிடிக்கவில்லை என்றாள் வேறு எங்கயாவது போய் தொலைய வேண்டியதுதானே 12 அப்பாவி உயிர்கள் போய் விட்டதே


Enrum anbudan
நவ 12, 2025 17:14

டாக்டர் என்றுதான் போடவேண்டும் அப்பொழுதுதான் இந்த நாய்களை பற்றி எல்லோரும் அறிந்து கொள்ள முடியும்


RAMESH KUMAR R V
நவ 12, 2025 17:12

வேரோடு சாய்க்க வேண்டும். தவறினால் தொற்று நோய் போல் பரவும் அபாயம் ஏற்படலாம்.


சமீபத்திய செய்தி