வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சீமான் கண்ணில் படாமல் பார்த்துக்கொள்ளவும். இல்லையேல் அவித்து தின்று விடுவார்
திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் வசவன்குப்பம் கடற்கரையில் முட்டைகளை சேகரிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஆண்டுதோறும் ஆமைகளின் இனப்பெருக்க காலத்தில், கடற்கரையில் அவை இட்டுச் செல்லும் முட்டைகளை அடைகாத்தலுக்காக, வனத்துறை சார்பில் சேகரிக்கப்படுவது வழக்கமாகும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆமைகளின் இனப்பெருக்க காலம் தொடங்கியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள வசவன்குப்பம் கடற்கரையில் ஆமை முட்டைகளை சேகரிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான பசுமைத் திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு 2 லட்சம் ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சீமான் கண்ணில் படாமல் பார்த்துக்கொள்ளவும். இல்லையேல் அவித்து தின்று விடுவார்