உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாகிஸ்தானுக்கு ராணுவ ரகசியங்கள் கசிவு; பஞ்சாபில் இருவர் கைது

பாகிஸ்தானுக்கு ராணுவ ரகசியங்கள் கசிவு; பஞ்சாபில் இருவர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு ராணுவ ரகசியங்கள் கசியவிட்ட, பாலக் ஷெர் மாசிஹ் மற்றும் சூரஜ் மாசிஹ் ஆகிய இருவரை பஞ்சாப் போலீசார் கைது செய்தனர். பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுடன் அனைத்து உறவுகளையும் மத்திய அரசு முறித்து கொண்டது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு ராணுவ ரகசியங்கள் கசியவிட்ட,பாலக் ஷெர் மாசிஹ் மற்றும் சூரஜ் மாசிஹ் ஆகிய இருவரை பஞ்சாப் போலீசார் கைது செய்தனர். இது குறித்து, பஞ்சாப் மாநில டி.ஜி.பி., கவுரவ் யாதவ் கூறியதாவது: ராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு கசிய விட்ட, பாலக் ஷெர் மாசிஹ் மற்றும் சூரஜ் மாசிஹ் ஆகிய இருவரை அமிர்தசரஸ் போலீசார் கைது செய்தனர். இவர்கள் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்துள்ளனர்.முதற்கட்ட விசாரணையில், தற்போது அமிர்தசரஸ் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹர்ப்ரீத் சிங் மூலம் நிறுவப்பட்ட பாகிஸ்தான் உளவுத்துறை செயல்பாட்டாளர்களுடன் இவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது. விசாரணைக்கு பிறகு முழு விபரம் தெரிய வரும். தேசிய நலன்களைப் பாதுகாப்பதில் பஞ்சாப் போலீசார் முழு வீச்சில் பணியாற்றுகின்றனர். நமது ஆயுதப் படைகளின் பாதுகாப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எந்தவொரு முயற்சிக்கும் எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Karthik
மே 04, 2025 14:22

விசாரணையும் வேண்டாம் ஒரு வெண்டக்காயும் வேண்டாம். இந்த எட்டப்பன்களை கொண்டு போயி என்கவுண்டர் பண்ணி கேஸ முடிங்க. இவனுங்களால இந்தியாவுக்கும், இந்தியர்களுக்கும் பெருத்த துயரமும் அவமானமும் தான் மிச்சம்.


RAMAKRISHNAN NATESAN
மே 04, 2025 13:50

உளவுத்துறை தூங்குகிறதா ? சாணக்கியர் கட்சிகளை பிளவு படுத்தி விலைக்கு வாங்குவதில்தான் தேர்ந்தவரா ?


Ramaswamy Sundaram
மே 04, 2025 12:45

சிங்கு அப்படின்னாலே சிங்கம் அப்படின்னு அர்த்தம்..ஆனா இந்த ரெண்டு சங்குகளும் அசிங்கம்


Ramesh Sargam
மே 04, 2025 12:01

இவைகள்தான் நம் நாட்டின் மிகப்பெரிய பிரச்சினைக்கு காரணம். ராணுவ ரகசியங்கள் கசிவு, பாக்கிஸ்தான் நாட்டு வளர்ப்பு தீவிரவாதிகளுக்கு அடைக்கலம், பண உதவி, இப்படி பலவற்றை நாம் வேரோடு பிடிங்கி எறிந்தால், பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் நம்மிடம் வாலாட்டுமா?


Ramesh Sargam
மே 04, 2025 12:01

இவைகள்தான் நம் நாட்டின் மிகப்பெரிய பிரச்சினைக்கு காரணம். ராணுவ ரகசியங்கள் கசிவு, பாக்கிஸ்தான் நாட்டு வளர்ப்பு தீவிரவாதிகளுக்கு அடைக்கலம், பண உதவி, இப்படி பலவற்றை நாம் வேரோடு பிடிங்கி எறிந்தால், பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் நம்மிடம் வாலாட்டுமா?


saravan
மே 04, 2025 11:55

விரைவில் தூக்கு தண்டனை கிடைக்க வேண்டும்


Bhakt
மே 04, 2025 19:20

அது எப்படி? உச்ச நீதி மன்றம் இருக்கே.


சமீபத்திய செய்தி