உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நங்லோய் தீ விபத்தில் இரு சிறார்களுக்கு காயம்

நங்லோய் தீ விபத்தில் இரு சிறார்களுக்கு காயம்

புதுடில்லி:டில்லியில் உள்ள நங்லோய் என்ற இடத்தில் உள்ள சைனிக் காலனி என்ற பகுதியில், நேற்று முன்தினம் மாலை நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில், இரண்டு சிறுவர்கள் படுகாயம் அடைந்தனர்.நங்லோய் என்ற இடத்தில் நேற்று முன்தினம் மாலை, 6:36 மணிக்கு பற்றிய தீயை அணைக்க, மூன்று தீயணைப்பு வண்டிகள் அனுப்பி வைக்கப்பட்டன. அந்த வண்டிகள், 9:25 மணிக்கு திரும்பின. விபத்து குறித்து, டில்லி தீயணைப்பு துறை தலைவர் அடுல் கார்க் கூறும்போது,''நங்லோய் என்ற இடத்தில் வீடு ஒன்றில் பற்றிய தீ, மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் பட்டு, அந்த கம்பி துண்டாகி விழுந்து கிடந்தது. அதை அறியாமல், அந்த கம்பியை மிதித்த சூர்யன்ஷ், 10, ரிதிக், 9, ஆகிய இருவருக்கு தீக்காயம் ஏற்பட்டது. அவர்களின் உடல் நிலை, ஸ்திரமாக உள்ளது,'' என்றார்.தீ விபத்தில் படுகாயம் அடைந்த இரு சிறுவர்களும், சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சூர்யன்ஷ் என்ற சிறுவனுக்கு, 35 சதவீதம், ரிதிக் என்பவருக்கு 19 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை