உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கொரோனா தாக்கம் மீண்டும் ஆரம்பம்: மும்பையில் 2 பேர் பலி

கொரோனா தாக்கம் மீண்டும் ஆரம்பம்: மும்பையில் 2 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மும்பையில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களில் 2 பேர் பலியாகினர்.உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் தாக்கம் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் அதிகம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது இந்தியாவின் பல பகுதிகளிலும் கொரோனா தொற்று பரவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தியாவில் 93 பேரும், தமிழகத்தில் 18 பேருக்கும் கொரோனா தொற்று பரவி உள்ளதாக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.இந் நிலையில், மும்பையில் கொரோனா தொற்றுக்கு 2 பேர் பலியாகி உள்ளதாக மஹாராஷ்டிரா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.இது தொடர்பான அறிக்கை ஒன்றை சுகாதாரத்துறை வெளியிட்டு இருக்கிறது.அதில் கூறப்பட்டு உள்ளதாவது; இரண்டு இறப்புகளும் மும்பையில் பதிவாகி உள்ளது. அவர்கள் இணை நோயாளிகள் ஆவர். பலியானவர்களில் ஒருவருக்கு வலிப்பு நோயும், மற்றொருவர் புற்றுநோய் பாதித்தவர்.கடந்த ஜனவரியில் இருந்து 6066 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு இருக்கின்றன. அவற்றில் 106 மாதிரிகள் கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்துள்ளது. இதில் 101 மாதிரிகள் மும்பையிலும், எஞ்சியவை புனே, தானே மற்றும் கோலாப்பூர் மாதிரிகள் ஆகும்.தற்போதைய நிலவரப்படி, 52 பேர் லேசான அறிகுறிகளுடன் சிகிச்சையில் உள்ளனர். 16 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிக்சை பெற்று வருகின்றனர். மஹாராஷ்டிராவில் மட்டுமல்ல மற்ற மாநிலங்களிலும் கொரோனா தொற்றுகள் எண்ணிக்கை உயருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

sathu
மே 21, 2025 15:58

புலி வருது, புலி வருதுன்னு ... எத்தினை நாளைக்கு தான் இந்த Bill Gates-உம் & Vaccine Mafia-வும் இந்த உலகை ஏமாத்துவானுங்களோ தெரியலை.


Sukumar
மே 21, 2025 13:20

not happened today. so far from January this year 2 died.


Iyer
மே 21, 2025 09:33

HPMV என்ற புதிய FRAUD ஐ பரப்பி உலக மக்களை கொள்ளை அடிக்க முயற்சியில் தோல்வி கண்ட PHARMA MAFIA - இப்போது மீண்டும் CORONA என்ற பெயரில் மீண்டும் கொள்ளை ஆரம்பித்து விட்டது.


USER_2510
மே 21, 2025 09:25

லாக் டவுன் வரணும் அப்போதான் ஒர்க் பிரேம் ஹோம் option கிடைக்கும்


ஜகதீஷ்
மே 21, 2025 08:24

லாக்டவுன்னு ஆரம்பிக்காம இருந்தா சரி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை