வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இம்மாதிரியான தேச விரோத போக்கில் பிடிபட்டு உறுதியானால், சிறைத்தண்டனை, வெள்ளிக்கிழமை பிரியாணி எல்லாம் வழங்காமல் நேரடியாக மேலுலகம் அனுப்புவதே சரியாக இருக்கும். உண்ட வீட்டிற்கே இரண்டகம் செய்யும் ஜந்துக்கள்.
புதுடில்லி: டில்லி சிறப்பு பிரிவு போ லீ சார், ஜார்க்கண்ட் பயங்கரவாத எதிர்ப்பு படையினர் மற்றும் ராஞ்சி போலீசார் இணைந்து நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பை சேர்ந்த இருவ ர் கைதாகினர். பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய நபர்களை பிடிக்க டில்லி, ராஞ்சி போலீசார் மற்றும் ஜார்க்கண்ட் பயங்கரவாத தடுப்பு பிரிவு படையினர் நாட்டின் பல்வேறு இடங்களில் நேற்று கூட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பொகாரோவை சேர்ந்த அஷார் டேனிஷையும் டில்லியில் அப்தாப் என்பவரையும் கைது செய்தனர். இதில் டேனிஷ் ஐ.எஸ்., அமைப்புடன் தொடர்புடையவர் என்பது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் கூறியதாவது: பல்வேறு மாநிலங்களில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய ஆறு பேர் சிக்கினர். பயங்கரவாத அமைப்பில் அவர்களது பங்கு என்ன என்பது குறித்து விசாரித்து வருகிறோம். பிடிபட்ட முக்கிய குற்றவாளிகளான டேனிஷ், அப்தாப் ஆகியோர் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இம்மாதிரியான தேச விரோத போக்கில் பிடிபட்டு உறுதியானால், சிறைத்தண்டனை, வெள்ளிக்கிழமை பிரியாணி எல்லாம் வழங்காமல் நேரடியாக மேலுலகம் அனுப்புவதே சரியாக இருக்கும். உண்ட வீட்டிற்கே இரண்டகம் செய்யும் ஜந்துக்கள்.