உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உறவினர்களுக்குள் மோதல் துப்பாக்கிச்சூடில் இருவர் காயம்

உறவினர்களுக்குள் மோதல் துப்பாக்கிச்சூடில் இருவர் காயம்

பட்லி: வடமேற்கு டில்லியின் பட்லியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயமடைந்தனர்.பட்லியின் பல்ஸ்வா பால் பண்ணை பகுதியை சேர்ந்தவர்கள் நவுஷத், 19, ஆசிப், 29, ஷகீல், வக்கீல், பிரின்ஸ், நசீர். இவர்கள் நேற்று முன்தினம் ஒன்றாக பேசிக்கொண்டிருந்தனர்.அப்போது அவர்களுக்குள் ஏதோ ஒரு விஷயத்திற்காக கருத்து வேறுபாடு ஏற்பட்டது. வக்கீல், பிரின்ஸ் ஆகிய இருவரையும் ஷகீல் தனக்கு ஆதரவாக பேசும்படி வலியுறுத்தியுள்ளார்.ஒருகட்டத்தில் நசீரை நோக்கி மூவரும் துப்பாக்கியால் சுட்டனர். ஆனால் தவறுதலாக நவுஷத், ஆசிப் ஆகிய இருவருக்கும் குண்டு காயம் ஏற்பட்டது. இதையடுத்து மூவரும் அங்கிருந்து தப்பி தலைமறைவாயினர்.காயமடைந்த இருவரும் எல்.என்.ஜே.பி., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.ஷகீல், பிரின்ஸ், வக்கீல் ஆகிய மூன்று பேரையும் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !