உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜார்க்கண்டில் நக்சலைட்கள் உடன் துப்பாக்கிச்சண்டை: பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் வீரமரணம்

ஜார்க்கண்டில் நக்சலைட்கள் உடன் துப்பாக்கிச்சண்டை: பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் வீரமரணம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராஞ்சி: ஜார்க்கண்டில் நக்சலைட்களுடன் நடந்த துப்பாக்கிச்சண்டையில் பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் வீரமரணம் அடைந்தனர். மேலும் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயம் அடைந்தார்.ஜார்க்கண்டின் பலாமு மாவட்டத்தில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்தது. அப்பகுதியில் போலீசாருடன் பாதுகாப்பு படையினர் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hfsqbhow&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பாதுகாப்புப் படையினர் வீரமரணம் அடைந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.இது குறித்து பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறியதாவது: நக்சலைட்டுகள் உடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், பாதுகாப்புப் படையினர் 3 பேருக்கு குண்டு காயம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக மெதினிராய் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு டாக்டர்கள் அவர்களில் இருவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் காயமடைந்த ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

V Venkatachalam
செப் 04, 2025 18:13

வீர மரணமடைந்த வீரர்களுக்கு கனத்த மனதுடன் எங்கள் அஞ்சலியை செலுத்துகிறோம். அவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம்.


Ramesh Sargam
செப் 04, 2025 10:58

நமது பாதுகாப்பு வீரர்களின் மரணம் இனி ஏற்படக்கூடாது. மரணம், அது நக்ஸலைட்டுக்கள் மரணமாகத்தான் இருக்கவேண்டும். வீரமரணம் அடைந்த வீரர்கள் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.


சமீபத்திய செய்தி