வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நகர்ப்புற நக்சலைட்டுகள் ஆதரவில்லாமல் நக்சலைட்டுகள் இருக்க மாட்டானுங்க . நக்சலைட்டுகளையும் அவனுங்க ஆதரவாளன்களையும் என்கவுண்டரில் போடவேண்டும்
நாராயண்பூர்: சத்தீஸ்கர் மாநிலம், நாராயண்பூர் மாவட்டத்தில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில், இந்தோ -- திபெத் எல்லை போலீஸ் படையைச் சேர்ந்த இரு வீரர்கள் உயிரிழந்தனர்; போலீசார் இருவர் காயமடைந்தனர்.பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து, சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டம், அபுஜ்மாத் பகுதியில் உள்ள கோட்லியார் வனப்பகுதியில் நக்சல் தேடுதல் வேட்டையில் நேற்று ஈடுபட்டனர். பின், முகாமுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது, நக்சல்கள் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டில் பாதுகாப்பு படையினரின் வாகனம் சிக்கியது. இதில் நான்கு பேர் காயமடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இருவர் உயிரிழந்தனர். அவர்கள், இந்தோ - திபெத் எல்லை படையின் 53வது பட்டாலியனின் அமர் பவார், 36, மஹாராஷ்டிரா; ராஜேஷ், 36, ஆந்திரா என அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்த மற்ற இருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் ஆபத்தான கட்டத்தை தாண்டியதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.இந்தாண்டில் இதுவரை சத்தீஸ்கரின் பஸ்தார் மண்டலத்தில் நடந்த நக்சல் தேடுதல் வேட்டையில், 17 போலீசார் உயிரிழந்துள்ளனர். அதே சமயம், 189 நக்சல்கள் என்கவுன்டரில் கொல்லப்பட்டு உள்ளனர்.
நகர்ப்புற நக்சலைட்டுகள் ஆதரவில்லாமல் நக்சலைட்டுகள் இருக்க மாட்டானுங்க . நக்சலைட்டுகளையும் அவனுங்க ஆதரவாளன்களையும் என்கவுண்டரில் போடவேண்டும்