உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இளைஞர் காங்., தலைவராக உதய் பானு சிப் நியமனம்

இளைஞர் காங்., தலைவராக உதய் பானு சிப் நியமனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: காங்கிரசின் அகில இந்திய இளைஞர் பிரிவுக்கு தலைவராக உள்ள பி.வி.ஸ்ரீனிவாசுக்கு பதிலாக, புதிய தலைவராக உதய் பானு சிப் என்பவரை நியமித்து, கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக காங்., வெளியிட்டுள்ள அறிக்கை:இளைஞர் காங்.,கின் பொதுச்செயலராக உள்ள உதய் பானு சிப், இந்த அமைப்பின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர், ஜம்மு - காஷ்மீர் இளைஞர் காங்கிரஸ் தலைவராக ஏற்கனவே பணியாற்றியவர். இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருகிறது. அதே நேரத்தில், முன்னாள் இளைஞர் காங்., தலைவராக பணியாற்றிய ஸ்ரீனிவாசின் பங்களிப்பையும் கட்சி பாராட்டுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

கண்ணன்
செப் 23, 2024 06:55

ஏன், இவரே இருந்துகொள்ளலாமே!


SUBBU,MADURAI
செப் 23, 2024 05:28

AICC Chairperson: Sonia Gandhi, INC President: Kharge, LoP: Rahul Gandhi, Youth Congress Pres: Uday Bhanu, NSUI Pres: Varun Choudhary. No Muslim, despite receiving the majority of Muslim votes! The same ecosystem wanted BJP to make a Muslim minister, despite no Muslims voting for BJP.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை