உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மேற்கு வங்கத்தில் வேலையிழந்த ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதம்

மேற்கு வங்கத்தில் வேலையிழந்த ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதம்

கோல்கட்டா : மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறி, 25,753 ஆசிரியர்களின் பணி நியமனத்தை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் ரத்து செய்தது. பணம் வாங்கிக் கொண்டு அவர்கள் நியமிக்கப்பட்டதாக, உச்ச நீதிமன்றம் குற்றம் சாட்டியது.இந்நிலையில், வேலையிழந்துள்ள ஆசிரியர்களில் ஒரு பிரிவினர், கோல்கட்டாவில் ஆச்சார்ய சதன் என்ற இடத்தில், நேற்று முன்தினம் இரவு முதல், தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை அந்த இடத்திலிருந்து அகற்ற, போலீசார் நேற்று நடத்திய தாக்குதலில், பலர் காயமடைந்தனர்.அவர்களை சந்தித்து ஆறுதல் கூறச் சென்ற பா.ஜ., - எம்.பி., அபிஜித் கங்கோபாத்யா மற்றும் ராஜ்யசபா முன்னாள் எம்.பி., ரூபா கங்குலி ஆகியோர், போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது பேசிய எம்.பி., அபிஜித் கங்கோபாத்யா போலீஸ் நடவடிக்கையைக் கண்டித்தார்.மேற்கு வங்கத்தில் 25,753 ஆசிரியர்கள் வேலை இழக்கக் காரணமாக இருந்தது, அப்போது உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த அபிஜித் கங்கோபாத்யாவின் உத்தரவுதான். அதன் அடிப்படையிலேயே மேல்முறையீடுகளின் போது, உச்ச நீதிமன்றம், ஆசிரியர்களின் வேலையை பறித்து உத்தரவு பிறப்பித்தது.கோல்கட்டா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து, 2024ல், பா.ஜ.,வில் சேர்ந்து, டம்லுக் லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்ற அபிஜித் கங்கோபாத்யா தான், இந்த விவகாரத்தின் காரணகர்த்தா. தற்போது அவரே, பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆறுதல் கூறியது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

மகி
ஏப் 11, 2025 19:22

இது முழுக்க முழுக்க மம்தா அரசின் ஊழல் தான் காரணம். பாவம் எத்தனை தகுதி உள்ள ஆசிரியர்களோ.


Muralidharan S
ஏப் 11, 2025 11:13

தமிழகத்தில் திராவிஷத்திற்கு ஓட்டுப்போட்டு தண்டனை அனுபவிக்கும் ஆட்டு மந்தை கொட்டத்தை போல, மேற்கு வங்கத்தில் தொடர்ந்து ஊழல் மற்றும் மதப்பிரிவினைவாதி மமதை மமதாவுக்குத்தானே தொடர்ந்து ஒட்டு போடுகிறீர்கள்.. செய்த பாவத்திற்கு தண்டனை என்பது எப்பவுமே நிச்சயம்....


naranam
ஏப் 11, 2025 10:34

லஞ்சம் கொடுத்து வாங்கிய ஆசிரியர் பதவி பறிபோனது மிகவும் நல்லது. வெட்கம் இல்லாதவர்கள் இவர்கள்.


sankaranarayanan
ஏப் 11, 2025 09:29

25,753 ஆசிரியர்களின் பணி நியமனத்தை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் ரத்து செய்தது. பணம் வாங்கிக் கொண்டு அவர்கள் நியமிக்கப்பட்டதாக, உச்ச நீதிமன்றம் குற்றம் சாட்டியது. இதற்கு முழு காரணம் அங்கு நடக்கும் மமதையில் அரசேதான் முதலில் இப்படிப்பட்ட குற்றங்களுக்கு உடந்தையான அரசை உச்ச நீதி மன்ற உடனே ஆட்சியிலிருந்து நீக்க வேண்டும் அதுதான் மற்ற எல்லா மாநில அரசுக்கும் அவர்களின் தவறான கொள்கைகளுக்கு ஒரு பாடமாகும் சாதாரண மக்களை வாட்டுவயதில் என்ன நியாயம் அரசியல் கோமாளிகளால் பாதிக்கப்படுவது சாதாரண பராமர மக்களே இதற்கு உடனே ஒரு தீர்வு காண வேண்டும்


Keshavan.J
ஏப் 11, 2025 09:12

இதில் வேலை கிடைத்தவர்கள் 50 சதம் ரோஹிங்கிய மற்றும் பங்களாதேஷிகல். வட நாட்டு ஊடகங்களை பார்த்தால் தெரியும்.


Amar Akbar Antony
ஏப் 11, 2025 09:04

ஒரு நீதிபதியாக நடுநிலை வகித்து நடந்த முறைகேடுகளை ஆராய்ந்து தெளிவாக ஜட்ஜ்மெண்ட் கொடுத்துள்ளார். இனியாவது இளைய தலைமுறையினர் நேர்மையாக வரட்டுமென்ற உயர் நோக்கோடு. அதே நீதிபதி ஒரு சாமானியனாக ஆறுதல் கூற வந்துள்ளார். கவர்னரின் அதிகாரத்தை குறைத்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு எப்படி பொன் எழுத்துக்களில் எழுதவேண்டுமோ அதே போல் இந்த தீர்ப்பும் முக்கியம் வாய்ந்தது. அரசியலுக்கு அப்பாற்பட்டு சமூகத்தில் நேர்மையை கொணர அருமையான தீர்ப்பு. இந்த டாஸ்மாக் நாட்டில இந்தமாதிரி ஒரு கண்டுபிடிப்பும் அவசியம்.


oviya vijay
ஏப் 11, 2025 08:27

இதனை நீதி மன்றம் இன்னும் ஒரு மணிப்பூர் ஆக மாற்ற முயற்சி


வாய்மையே வெல்லும்
ஏப் 11, 2025 10:43

அது எப்படி திமிங்கிலம் உருட்டை கனகச்சிதமா புளுகு மூட்டையுடன் ரீல் சுற்றி விடுற.. கொடுக்குற காசுக்கு மேல கூவும் ஊப்பீஸ் ஆக இருக்கீங்களே.. உங்களை பார்த்தா அறிவாலயம் பெருமை படும்.


Muralidharan S
ஏப் 11, 2025 11:34

ஏற்கனவே உன்னோட மமதை மமதா பங்களாதேசிகளை, உள்ளே விட்டு மேற்கு வங்காளத்தை பங்களாதேஷ் ஆகா மாற்றிக்கொண்டு தான் இருக்கிறார். பிரிவினைவாதிகளுக்கு துணை போவதே உனக்கும் நீ சார்ந்து இருக்கும் கட்சிக்கும் பொழப்பு. இதெல்லாம் ஒரு பொழப்பு.


Barakat Ali
ஏப் 11, 2025 08:19

குற்றம் - அதாவது பணத்துக்குப் பணி நியமனம் - நிரூபிக்கப்பட்டதால் தான் பணிநீக்கம் .....


Sundar
ஏப் 11, 2025 10:53

நிரூபிக்க பட்டதால்தான், பணி நீக்கம்... கண் மூடித்தனமாக எதிர்க்க வேண்டும் என்று போடப்பட்ட கருத்து...


Barakat Ali
ஏப் 12, 2025 00:18

எனது கருத்து உங்களுக்குப் புரியவில்லை என்று நினைக்கிறேன் .....


nv
ஏப் 11, 2025 08:17

சிறுது உப்பு போட்டு சாப்பிட்டுபவர் என்றால் மம்தா பதவி விலக வேண்டும்.. இவர் நம்ம திராவிட மாடல் ஊழலையும் மிஞ்சி விட்டார்!!


GMM
ஏப் 11, 2025 07:35

மேற்கு வங்கத்தில் முறைகேடாக வேலை பெற்று, நீதிமன்றம் ரத்து செய்த ஆசிரியர்கள் மம்தாவின் ஆலோசனையில் பேரில் தொடர் உண்ணா விரதம் என்று கருதலாம். மன்றம் மோசடி ஆசிரியரை சிறைப்படுத்தி இருக்க வேண்டும். தேர்வு செய்த மாநில அரசியல் ஊழியர்கள் டிஸ்மிஸ் செய்து இருக்க வேண்டும். செய்யவில்லை. நீதிமன்றத்தை மாநில நிர்வாகத்தால் வீட்டோ அதிகாரம் மூலம் முடக்கும் முன், மம்தாவின் சுயாட்சியை மன்றம் டிஸ்மிஸ் செய்து, ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்த வேண்டும். தமிழகத்திலும் நடவடிக்கை தேவை. அல்லது வரும் தேர்தல் வரை வெற்றி பெற்ற கட்சிகள் விகிதாசார அடிப்படையில் புதிய கூட்டு மந்திரி சபை அமைக்க நீதிபதி சிறப்பு அதிகாரம் கொண்டு உத்தரவிட வேண்டும்.