உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசு வங்கியில் அதிகாரி ஆகணுமா; பட்டதாரிகள் 1500 பேருக்கு சான்ஸ்!

அரசு வங்கியில் அதிகாரி ஆகணுமா; பட்டதாரிகள் 1500 பேருக்கு சான்ஸ்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் 1500 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 13.யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில், உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.உள்ளூர் வங்கி அதிகாரி- 1500.

கல்வி தகுதி என்ன?

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலை.,யில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பிக்க, 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒ.பி.சி., பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், PwBD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

கட்டணம்

விண்ணப்ப கட்டணம் ரூ.850. எஸ்.சி., எஸ்.டி, மற்றும் PwBD பிரிவினருக்கு விண்ணப்பிக்க கட்டணம் ரூ. 175.

தேர்வு செய்யப்படுவது எப்படி?

எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் மூலம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.

முக்கியமான தேதிகள்

இன்று(அக்., 24) முதல் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 13.

விண்ணப்பிப்பது எப்படி?

https://www.unionbankofindia.co.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ