உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாதத்திற்கு பாரதம் அடிபணியாது; உயிரிழந்தவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அமித்ஷா உறுதி

பயங்கரவாதத்திற்கு பாரதம் அடிபணியாது; உயிரிழந்தவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அமித்ஷா உறுதி

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து தாக்குதல் நடந்த பஹல்காம் பகுதியை நேரில் அவர் ஆய்வு செய்தார். பயங்கரவாதத்திற்கு பாரதம் அடிபணியாது என அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் மாவட்டத்தில் சுற்றுலா தலத்தில், ராணுவ சீருடையில் வந்த பயங்கரவாதிகள், நேற்று நடத்திய தாக்குதலில், வெளிநாட்டவர் இருவர் உட்பட, 26 சுற்றுலா பயணியர் உயிரிழந்தனர். சவுதி அரேபியா சென்ற பிரதமர் மோடி அவசரமாக நாடு திரும்பினார்.பயங்கரவாதிகளுக்கு தக்க பதலடி கொடுக்க முக்கிய ஆலோசனை நடந்து வருகிறது. ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள, அமித்ஷா பாதுகாப்பு படை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தற்போது பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சின்னாறு எல்லை பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில், பயங்கரவாதிகள் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.இந்நிலையில், காஷ்மீரில் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல்களுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பிறகு குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் அமித்ஷா கூறியதாவது: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு கனத்த இதயத்துடன் இறுதி மரியாதை செலுத்தினேன்.பயங்கரவாதத்திற்கு பாரதம் அடிபணியாது. இந்த கொடூரமான தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தப்பிக்க விடமாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

venugopal s
ஏப் 23, 2025 20:23

அது எல்லாம் சரி தான், முதலில் தீவிரவாதிகள் நமது நாட்டுக்குள் நுழைந்து தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதை தடுத்து நிறுத்தும் வழியைப் பாருங்கள்!


மொட்டை தாசன்...
ஏப் 23, 2025 15:35

குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து தூக்கிலிடவேண்டும் அப்போதுதான் இறந்தவர்களின் ஆத்ம சாந்தியடையும்.


beindian
ஏப் 23, 2025 15:21

URI .. தாக்குதல் பிஜேபி அரசு ஆட்சியில் நடந்தது கார்கில் .. தாக்குதல் பிஜேபி அரசு ஆட்சியில் நடந்தது புல்வாமா .. தாக்குதல் பிஜேபி அரசு ஆட்சியில் நடந்தது அமர்நாத் .. தாக்குதல் பிஜேபி அரசு ஆட்சியில் நடந்தது பார்லிமென்ட் .. தாக்குதல் பிஜேபி அரசு ஆட்சியில் நடந்தது பேஹல்கம் .. தாக்குதல் பிஜேபி அரசு ஆட்சியில் நடந்தது கையாலாகாத மோடி அரசு.


Karthik
ஏப் 23, 2025 19:47

எதிரியும் நண்பனும் உங்கள் அருகில் இருந்தால் நீங்கள் யாரை தாக்குவீர்கள்?? எதிரியையா அல்லது நண்பனையா?? மூர்க்க தீவிரவாதிகளை பொறுத்தவரை பிஜேபி எதிரி, காங்கிரஸ் நண்பன் புரிந்தால் சரி..


Pandianpillai Pandi
ஏப் 23, 2025 14:33

எத்தனை காலம் தான் மக்கள் அவதிப்படுவார்கள். உளவுத்துறை எதற்கு எதிர்கட்சிகளை கண்காணிப்பதற்கா ? பயங்கரவாதம் ஜனநாயக நாட்டில் தான் அரங்கேறுகிறது . சுற்றுலா பகுதிகள் மக்கள் நிறைந்த இடங்களில் கூட பாதுகாப்பு இல்லை என்றால் உள்துறை செயல்பாடுகள் கேலிக்கூத்தாகின்றன . எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தண்டனை பெற்று தருவதோ. நீதியை நிலைநாட்டுவதில் மக்கள் நிம்மதி அடையப்போவதில்லை . அதிகமான வரி மக்களுக்கு விதிக்கப்படுகிறது. வரி கட்டியும் நமக்கு பாதுகாப்பு இல்லையே என்பதை நினைக்கும்போது வலி இன்னும் அதிகமாகிறது.


Saravanan
ஏப் 23, 2025 14:20

வாய கொஞ்சம் மூடிக்கிட்டு இருக்கணும் இப்போ உன் மூர்கத்தனத்தை இப்போ காட்டக்கூடாது


veera
ஏப் 23, 2025 13:10

சுட்டவன் இந்து வா கேட்டு சுட்ட போது .. என்ன செய்ய.


xyzabc
ஏப் 23, 2025 12:42

Getting reminded of the last scene of the Kashmir Files. Bharat Mata ki jai. With tears.


TRE
ஏப் 23, 2025 12:39

Amit shah must resign totally failed as HM


Prasanna Krishnan R
ஏப் 23, 2025 14:08

@TRE, be a man. Show your identity. what is your name? the day I see you will be the last day of your life.


Perumal Karuna
ஏப் 23, 2025 12:12

Ajay Doval. It is time for you.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 23, 2025 11:46

நாம் நமது பலத்தையும், பலவீனத்தையும் அறிந்து வைத்திருக்கிறோமோ இல்லையோ..... எதிரி நன்கு அறிந்து வைத்துள்ளான் .....


சமீபத்திய செய்தி