உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முகவரியை எளிதாக கண்டுபிடிக்க மத்திய அரசின் சூப்பர் திட்டம்; ஒவ்வொரு வீட்டுக்கும் வருகிறது DIGIPIN

முகவரியை எளிதாக கண்டுபிடிக்க மத்திய அரசின் சூப்பர் திட்டம்; ஒவ்வொரு வீட்டுக்கும் வருகிறது DIGIPIN

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு தனித்துவமான 12 இலக்கு குறியீடுடன் கூடிய டிஜிட்டல் முகவரியை கொண்டு வரும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கி உள்ளது.நாட்டில் உள்ள ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் தனித்துவமான அடையாளச் சான்று என்பது அவசியம். அதற்காகவே பிரத்யேகமாக கொண்டு வரப்பட்டது தான் ஆதார் அட்டை. அதிகாரப்பூர்வ அடையாள சான்றாக அறிவிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.எப்படி ஒரு மனிதனின் தனித்துவ அடையாளமாக ஆதார் உள்ளதோ அதுபோன்ற ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்துவமான முகவரியை கொண்டு வந்து நடைமுறைப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கி உள்ளது. ஒரு ஆதார் போன்று, இனி ஒவ்வொரு வீட்டுக்கும் டிஜிட்டல் முகவரியை கட்டமைக்க வேண்டும் என்பதே இதன் மையப்புள்ளி எனலாம்.ஆதார் எண்ணை போல DIGIPIN எனப்படும் 12 இலக்கு குறியீடு இந்த முகவரியில் இருக்கும். முழுக்க, முழுக்க ஜிபிஎஸ் அடிப்படையிலான துல்லியமாக ஒரு வீட்டின் அல்லது ஒரு இடத்தின் முகவரியை கண்டறிய உதவுவதே இதன் நோக்கம்.தனித்துவமான டிஜிட்டல் ஐ.டி., 53 ஆண்டுகாலமாக பயன்படுத்தப்பட்டு வரும் பின்கோடு எனப்படும் அஞ்சலக அடையாள எண்ணின் மறுவடிவம் என குறிப்பிடலாம். எப்படி ஒரு பின்கோடு மூலம் எந்த பகுதிக்கு ஒரு கடிதம் அனுப்பப்படுகிறது என்பதை அடையாளம் காண்பது போல டிஜிட்டல் ஐடி அமைக்கப்படும். இதற்காக தபால்துறை சார்பில் பூகோள ரீதியான தரவுகளைக் கொண்டு டிஜிட்டல் முகவரிகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் அண்மையில் தொடங்கப்பட்டு உள்ளது. ஒரு பகுதியை மட்டும் குறிப்பிடும் பின்கோடு போல், ஒரு வீட்டையோ அல்லது அலுவலகத்தையோ குறிக்கும் தனித்துவமான, துல்லியான அடையாள நடைமுறை என்று மூத்த அஞ்சலக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.இந்த நடைமுறையானது, இஸ்ரோ, ஹைதராபாத் ஐ.ஐ.டி., மற்றும் தேசிய தொலையுணர்வு மையம் (National Remote sensing center)பங்களிப்பின் மூலம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த டிஜிட்டில் எண்(DIGIPIN) மொத்தம் 12 இலக்கு குறியீடுடன் இருக்கும். ஒவ்வொரு தனி நபருக்கும் பிரத்யேக அல்லது தனித்துவ அடிப்படையில் வழங்கப்படும். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: டிஜிட்டல் முகவரியின் ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகின்றன. எதிர்காலத்தில் அனைத்து தரப்பினராலும் அறியப்படும். அப்போது ஒருவர் தனது பெயர் மற்றும் வீட்டு எண்ணுடன் டிஜிட்டல் எண்ணை மட்டுமே தந்தால் போதும். அவரின் வீட்டு முகவரிக்கு அனுப்பப்பட வேண்டிய தபால் உள்ளிட்ட அனைத்தும் அனுப்பப்பட்டு விடும்.தொலைதூரங்களில் வசிக்கும் மற்றும் வீட்டு இலக்கம் இல்லாத குடியிருப்புவாசிகளுக்கு இந்த நடைமுறை மிகவும் உதவிகரமாக இருக்கும். குறிப்பாக மலைபிரதேசங்களில் உள்ளவர்களின் வீடு மற்றும் முகவரியை கண்டுபிடிக்கும் போது ஏற்படும் கடும் நெருக்கடிகள் மற்றும் சிரமங்களுக்கு DIGIPIN நடைமுறை தீர்வாக அமையும். இது தவிர அரசின் நலத்திட்டங்கள், பயன்கள் சம்பந்தப்பட்ட நுகர்வோர்களுக்கு முறையாக சென்றுவிட்டதா என்பதையும் அறிய முடியும். இவ்வாறு அதிகாரிகள் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Arul selvaraj
ஜூன் 06, 2025 11:09

வாழத்தெரியாத மக்கள் ஓட்டு போட்டால் ஆளத்தெரியாத தலைவன் நாட்டை ஆள்வான் - வேதாந்திரி மகரிஷி.


spr
மே 31, 2025 19:38

இதற்கும் முன்பு தொடங்கிப் பின் கைவிடப்பட்ட அஞ்சலக அட்டைக்கும் என்ன வேறுபாடு? ஒருவரின் முகவரி அடிக்கடி மாற வாய்ப்பிருக்கிறது ஏற்கனவே வாக்காளர் அட்டை முதல் ஆதார் வரை பல அடையாள அட்டைகள் இருக்கையில் எதுவுமே முறையாக சரி பார்க்க இயலாத ஒன்றாக இருக்கிறது அந்நிலையில் இது ஒரு வீண் செலவோ என்றொரு ஐயம் உண்டாகிறது. ஆதார் முதல் எந்த அடையாள அட்டை விவரங்களும் பாதுகாப்பாக இல்லை என்பதே உண்மை


murali
மே 31, 2025 15:59

நமது நாட்டின் ராணுவ ரகசியங்களை விற்கும் கயவர்களை பிடிக்க ஏதாவது வழி உண்டா? பிறகு நமது நாட்டின் நிதி நிறுவனங்களில் வாராக்கடன்களை திரும்பப் பெற இந்த முறை பயன்படும்?


Pmnr Pmnr
மே 31, 2025 14:43

இது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை


SUBRAMANIAN P
மே 31, 2025 13:49

அப்படியே ஒருவனுக்கு ஒரு வீடு, ஒரு மனைவி, ஒரு குழந்தை மட்டுமே என்ற திட்டங்களையும் அமல் படுத்திவிட்டால் இந்த விடியா திராவிடர்கள் கூட்டம் காணாமல் போயி நாடு உருப்பட வழிபிறக்கும்.


murali
மே 31, 2025 16:01

விடியா திராவிடர்கள் மட்டுமா? திராவிடர்கள் அல்லாதார் மிகவும் உத்தமர்களோ?


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 31, 2025 12:58

பச்சைஸ்க்கு எதிரான கண்காணிப்புத் திட்டம் ன்னு கொடிபிடிக்க வாய்ப்பிருக்கு .....


Bhaskaran
மே 31, 2025 12:53

அடிக்கடி வீடு மாற்றுபவர்கள் என்ன செய்ய முடியும்


V RAMASWAMY
மே 31, 2025 12:35

எந்த நல்லது இருந்தாலும் அது கயவர்களின் கைக்கு போகாமல் இருக்கும் யுக்தியையும் கையாள வேண்டும். இல்லையெனில் அது ஆபத்தையும் விளைவிக்கலாம்.


Sundararajan
மே 31, 2025 11:43

சூப்பர். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ எவ்வித எதிர்ப்பு இருந்தாலும்.. அவ்வளவு நன்மை வீட்டிற்கு மட்டும் இல்லை நமது நாட்டிற்கும்..வாழ்க பாரதம்...


ஜான் குணசேகரன்
மே 31, 2025 11:16

ஆதார் அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியதால் பணிகள் வேகமாகவும் பிழைகள் இல்லாமலும் செய்து முடிக்கப்பட்டது. அதன் பயனாக தற்போது பல சேவைகள் எளிதாக கிடைக்கிறது. இப்பணியை மாநில அரசு மேற்கொண்டு இருந்தால் பல வகைகளில் collection, corruption செய்து பல போலி அட்டைகள் உருவாக்க பட்டு இருக்கும். எனவே வீடுகள் மற்றும் நிலங்கள் தனியே அடையாளம் காணப்பட்டு அடையாள அட்டை வழங்கும் பணிகளை மத்திய அரசு செயல்படுத்தினால் நன்றாக இருக்கும். போலி வீடுகளுக்கு அடையாள அட்டை வழங்குவதை தடுக்கும்.


murali
மே 31, 2025 16:11

ஏற்கெனவே ஒரு அட்டை உள்ளதே. அதன் பயன் என்ன? குற்றங்கள் குறைந்ததா? மேலும் அதிகரிக்கத் தானே செய்கிறது. மேலே சரியா இருக்கனும். அப்பதான் கீழே எல்லாம் சரியா இருக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை