உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / படையெடுப்புகளால் அழிந்த மத தலங்களை மீட்க வேண்டும்: உ.பி., முதல்வர் யோகி பேச்சு

படையெடுப்புகளால் அழிந்த மத தலங்களை மீட்க வேண்டும்: உ.பி., முதல்வர் யோகி பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அயோத்தி: “வெளிநாட்டு படையெடுப்பாளர்களால் அழிக்கப்பட்ட கோவில்கள் உள்ளிட்ட மத தலங்கள், உரிய மரியாதையுடன் மீட்டெடுக்கப்பட வேண்டும்,” என, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தியுள்ளார். உத்தர பிரதேத்தின் அயோத்தியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில், பா.ஜ.,வைச் சேர்ந்த அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது: அடிமைத்தன காலத்தில், வெளிநா ட்டு படையெடுப்பாளர்களால் ஏராளமான மதத் தலங்கள் அழிக்கப்பட்டன. அவற்றை மீட்டெடுப்பது நம் கடமை. அயோத்தி, காசி, மதுராவில் உள்ள ஹிந்து கோவில்கள் உட்பட அனைத்து மத தலங்களும் முழு மரியாதையுடன் மீட்டெடுக்கப்பட வேண்டும். இந்த மறுசீரமைப்பு என்பது நம்பிக்கையின் செயல் மட்டுமல்ல. இது, கலாசார மற்றும் ஆன்மிக பாரம்பரியத்திற்கான பொறுப்பும் கூட. அயோத்தியில் தற்போது எழுந்துள்ள ராமர் கோவில் உருவாக, 500 ஆண்டுகளாக துறவியர், பக்தர்கள் என ஏராளமானோர் போராடினர். இன்று அந்த கனவு நனவாகியுள்ளது. இதுபோல், பிற தலங்களும் மீட்டெடுக்கப்பட வேண்டும். நம் மூவர்ணக் கொடி, அரசியலமைப்பு போல், மத சின்னங்களுக்கும் உரிய மரியாதை அளிக்க வேண்டும். சனாதன தர்மம் நன்றி உணர்வை போதிக்கிறது. சமூகம் மற்றும் தேசத்தின் முன்னேற்றத்தையும் நாடுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

என்னத்த சொல்ல
செப் 14, 2025 10:07

இந்தா கெளம்பிட்டாருல்ல.. இப்படியே பேசி பேசி மக்களின் உணர்வுகளை தூண்டி, மக்களை மக்குகளாகவே வைத்திருக்கிறார்கள். மக்கள் விழித்துக்கொள்ள வில்லையென்றால், இந்த அரசியல்வாதிகளின் கையில் நாடு இருப்பதால், எதிர்காலத்தை நினைத்தால் கவலையாதான் இருக்கு... இவர் பேச்சையும் சிலபேரு ஆதரிகாரங்கண்ணா என்னத்த சொல்ல.


Arunkumar,Ramnad
செப் 14, 2025 23:07

நீ பேசாம பாகிஸ்தானுக்கு ஓடி விடு இது இந்து தேசம் உன்னைப் போன்ற மூர்க்கன்களுக்கு இங்கு இடமில்லை


Appan
செப் 14, 2025 08:17

ஆப்பிக்காவின் Burkina Faso ஒரு இஸ்லாமிய நாடு. அந்த நாட்டின் ஜனாதிபதி சொல்கிறார் சவூதி அரேபிய 200 மசூதி கட்ட நிதி கொடுக்கிறோம் என்று சொல்கிறதாம், ஆனால் ஜனாதிபதி ரோடு, மிசாரம், தொழில் சாலை, பல்கலைக் கல்கங்கள் வேண்டும் என்கிறார். அதன் படி நிதியை கோவில்களுக்கு செலவிடாமல் infrastructure க்கு முதலிடு செய்து நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தி உள்ளார்.. பிஜேபியும் இந்த சித்தாந்தத்தை பின்பற்றனும். பசி வந்திட பத்தும் பறந்து போகும்.


KOVAIKARAN
செப் 14, 2025 07:38

UP முதல்வரின் ஆசைதான் நமது நாட்டிலுள்ள அனைத்து இந்துக்களின் ஆசைகள். இவர் முயற்சி செய்து நடவடிக்கை எடுத்தால், நிச்சயமாக அது நிறைவேறும். அதற்காக நாட்டிலுள்ள அணைத்து இந்துக்களும் - திமுகாவிற்கு வாக்களிக்கும் இந்துக்கள் தவிர - அனைவரும் உதவவேண்டும். நான் ஏன் திமுகா விற்கு வாக்களிக்கும் இந்துக்கள் தவிர என்று குறிப்பிட்டேன் என்றால், அவர்கள் கோவிலுக்கு சென்று பக்தியுடன் தரிசனம் செய்தால்கூட, தேர்தல் என்று வரும்போது, திமுக போடும் பிச்சைக்காசுக்காக அவர்களுக்கு ஓட்டுப்போட்டு, தமிழகத்தை நாசம் செய்வதற்க்கு உதவுகிறார்கள். அதனால் தான். உண்மையான இந்துக்கள் உண்மையான பக்தி சனாதானத்தைப் பின்பற்றுபவர்கள் என்றால், திமுக உட்பட கடவுள் நம்பிக்கை இல்லாத இந்தக் கட்சிக்கும் ஒட்டுப் போட மாட்டார்கள்.


venugopal s
செப் 14, 2025 07:25

மக்களுக்கு ஒன்றும் செய்ய மாட்டார்கள், ஆனால் மதம்,மாடு என்றால் ஓடோடி வருவார்கள்!


vivek
செப் 14, 2025 08:58

இருநூறு கொடுத்தால் டாஸ்மாக் நோக்கி ஓடோடி செல்லும்...


Kanns
செப் 14, 2025 07:10

100% Yes, But Slowly BUT Steadily


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 14, 2025 07:02

ஆமாம் அய்யா மீட்டெடுக்க வேண்டும் அப்படியே எங்கள் தமிழகத்தில் இன்னமும் இந்து கோயில்கள் மீது விஞ்ஞான ரீதியான தாக்குதல் நடத்தி ஒரு கூட்டம் எங்கள் இந்து மதத்தவர்கள் சொத்து பணத்தை கொள்ளையடித்து கொண்டு உள்ளார்கள். அவர்களிடம் இருந்து எங்கள் இந்து கோயில்கள் கோயில் பணம் சொத்தை மீட்டெடுக்க ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.


Mahadevan
செப் 14, 2025 04:13

100% மீட்க்க படவேண்டும்.


சமீபத்திய செய்தி