உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியீடு

யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: யுபிஎஸ்சி நடத்திய முதல்நிலைத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.நாடு முழுதும் காலியாக உள்ள 979 பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை மத்திய அரசின்தேர்வாணையமான யுபிஎஸ்சி வெளியிட்டது. கடந்த மே மாதம் 25ம் தேதி இரண்டு ஷிப்ட்களாக நடந்த தேர்வை சுமார் 10 லட்சம் பேர் எழுதினர். இதனையடுத்து இந்த தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என தேர்வர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் இன்று மாலை முடிவுகள் வெளியிடப்பட்டன. இதனை upsc.gov.in மற்றும் upsconline.nic.inஎன்ற இணையதளங்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேலும் வரும் 16 முதல் 25ம் தேதிக்குள், மெயின் தேர்வுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ஷாலினி
ஜூன் 11, 2025 22:52

அனைவருக்கும் வாழ்த்துகள். மெயின் தேர்விலும் வெற்றி பெற கடுமையாக முயற்சி செய்யுங்கள்


ஆனந்த்
ஜூன் 11, 2025 22:51

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை