உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வயிற்று வலியால் 15 ஆண்டு வேதனை; ஆபரேஷன் செய்தபோது டாக்டர்கள் ஷாக்

வயிற்று வலியால் 15 ஆண்டு வேதனை; ஆபரேஷன் செய்தபோது டாக்டர்கள் ஷாக்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெய்ரேலி: உத்தரப்பிரதேசத்தில் வயிற்று வலியால் துடித்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், வயிற்றில் இருந்த 2 கிலோ முடியை அகற்றினர். பெய்ரேலியைச் சேர்ந்த 31 வயது பெண் ஒருவர் தமது 16 வயது முதல் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். எத்தனையோ தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று தொடர் சிகிச்சை எடுத்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. மீண்டும். மீண்டும் வயிற்று வலியால் துடிக்க, கடந்த மாதம் 22ம் தேதி பெய்ரேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.பலகட்ட பரிசோதனைகளுக்கு பின்னர் அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் குழு முடிவு செய்தது. அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் செய்தபோது ஒரு கணம் அனைவரும் அதிர்ந்தே போயிருக்கின்றனர்.அதற்கு காரணம், அவரது வயிற்றில் இருந்து 2 கிலோ முடிதான். பண்டல், பண்டலாக இருந்த முடியை கொத்தாக அகற்றி இருக்கின்றனர். இந்த முடிதான் அந்த பெண்ணின் வயிற்று வலிக்கு காரணமாக இருந்திருக்கிறது. இது குறித்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் எம்.பி. சிங், மருத்துவர் அஞ்சலி சோனி தலைமையிலான மருத்துவர்கள் கூறி உள்ளதாவது; அந்த பெண்ணுக்கு அரிய உளவியல் பாதிப்பு இருந்திருக்கிறது. இந்த பாதிப்புக்கு டிரைகோலோடோபேமனியா என்று பெயர். இதுபோன்ற பாதிப்பை உடையவர்கள் தன்னை அறியாமலே முடியை சாப்பிடுவார்கள். சிறுவயதில் இருந்தே இந்த பெண்ணுக்கு இத்தகைய பாதிப்பு இருந்திருக்கிறது. பெரேலி பகுதியில் கடந்த 25 ஆண்டுகளில் இத்தகைய பாதிப்பு கொண்ட ஒரே பெண் இவர்தான். அதுதான் தற்போது வயிற்று வலிக்கு காரணமாக அமைந்து இருக்கிறது. உரிய முறையில் அறுவை சிகிச்சை செய்து முடிக்கப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட பெண் நலமாக உள்ளார். அவருக்கு விரைவில் உளவியல் சிகிச்சை தரப்பட உள்ளது. இவ்வாறு மருத்துவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

என்றும் இந்தியன்
அக் 06, 2024 19:52

16 வயதிலிருந்து கடுமையான வயிற்று வலி அப்படினா முடியை 5 வயதிலிருந்தே சாப்பிட ஆரம்பித்து விட்டாரா என்ன???இந்த முடி xray Ultrasound மூலம் கண்டு பிடிக்க முடியாது???அப்போ இந்தப்பெண்ணின் அம்மா அப்பா அவர்கள் இந்த பெண் முடி சாப்பிடும் செயலை கவனிக்கவே இல்லையா இல்லை கண்டு கொள்ளவேயில்லையா????2 கிலோ முடி?????இனியும் இவள் முடி சாப்பிடமாட்டாள் என்று என்ன உறுதி???


R S BALA
அக் 06, 2024 19:38

மறுபடியும் முடியை சாப்பிடாம இருக்கோணும் அந்த பெண்மணி..


மயிலவன்
அக் 06, 2024 17:38

தன்னோட தலைமுடி மட்டுமல்லாமல் பக்கத்துல இருக்கிறவங்க முடியையும் சாப்பிட்டிருப்பார் போல


Rajan
அக் 06, 2024 17:12

தாங்க முடியாத வேதனையை முடித்து வைக்க டாக்டர் எடுத்த சரியான முடிவால் முடிந்தது முடியால் வந்த வியாதி


ஆரூர் ரங்
அக் 06, 2024 16:10

முடிவா பிரச்சனையைக் கண்டுபிடித்த மருத்துவர்களுக்கு நன்றி


Rajathi Rajan
அக் 06, 2024 19:09

பாரு சொட்டை தலையன் ஆரூர் "குன்றின் மேல் அமர்ந்து நன்றி சொல்லுது".....


முக்கிய வீடியோ