வாசகர்கள் கருத்துகள் ( 8 )
நான் சேலம் மாவட்டம் காடையாம்பட்டி வட்டம் இராமமூர்த்தி நகர் கிராமம் எனக்கு3 சென்ட்ல நிலம் இருக்கு அதுல இரண்டு அறை வைத்து மெத்தை வீடு கட்டியுள்ளேன் அது காசு கொடுத்து வாங்கிய நிலம் வாங்கி 30 வருடத்துக்கு மேல் ஆகிறது அப்போது பட்டா வாங்கவில்லை பத்திர பதிவும் இல்லை ஆனால் அரசாங்கத்தின் நமுனா பட்டா வாங்கி உள்ளோம் அதை பட்டாவாக மாற்ற 70000 கே என் புதுர் விஎஓ கேட்கிறார் நான் இன்ன செய்யவேண்டும்
பொய்க்கு பணம் கொட்டுது உண்மைக்கு பணம் கிடைக்காது ஏழை பொதுமக்கள் என் ரத்தத்தை குடிக்கும் குடிக்கும் அரசு அதிகாரிகள் தண்டனை வழங்குவார்கள் யார் என்ற கேள்வி
நான் அறிந்தவரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் மாதம் ஒருமுறை VAO, RTO மற்றும் பணம் புழங்கும் அலுவலகங்களுக்கு சென்று தங்களது மாத மாமுலை பெற்றுச்செல்வதாக தகவல். ஒவொரு தாலுகாவிற்கும் ஒரு VAO சங்க தலைவர் உள்ளார். VAO க்கள் மாத மாமுலை VAO தாலுகா சங்க தலைவரிடம் கொடுத்து விடுகிறார்கள். VAO சங்க தலைவர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் மாத மாமுலை அளித்துவிடுகிறாராம். ஆதலால் VAO க்கள் நம்மிடம் சாலன்ஞ் செய்து மக்களிடம் லஞ்சத்தை கறாராக வசூல் செய்கின்றனர். ஆதலால் நாம் யார் மீது புகார் கொடுக்கிறோமோ அவர்களுக்கு தகவல் முன்பே சென்றுவிடுகிறது. இதுபோன்ற கேவலமான போலீஸ் அமைப்பை தமிழக முதல்வரை வைத்துக் கொண்டு நாடு விளங்கிவிடும். சுயபுத்தி இல்லாத டுமிழனுக லஞ்சம் கொடுத்தே ஒழிந்துவிடுவார்கள்.
கோவில்பட்டி தாசில்தார் பாலசுப்பிரமணியம் இன்னொரு லஞ்ச டைனோசர். ஜாதி அடிப்படையிலேயே எல்லாத்தையும் யோசிக்கும் இழி பிறவி
தூத்துக்குடி டிஸ்ட்ரிக்ட் கோவில்பட்டி தாலுகாவில் சுடலை முத்துக்கிருஷ்ணர் என்று ஒரு வி.ஏ.ஓ இருக்கிறார். ஊழலில் ஊறியவர். பரமசிவன், சீனிவாசகன் என்ற ரெண்டு உடன் பிறந்த பிரதர்ஸ் இருக்கிறார்கள், ரொம்ப மோசமான லஞ்ச பெருச்சாளிகள். கண்ணன், சிவகுமாரன் என்று இன்னும் இரண்டு வி.ஏ.ஓ லஞ்ச முதலைகல். இவர்களை எல்லாம் தூக்கி உள்ளே போடணும். லஞ்ச ஒழிப்பு துறை இவர்களிடம் மாதா மாதம் மாமூல் வாங்குவதாக பரமசிவம் வி.ஏ.ஓ வெளிப்படையாக சொல்கிறார். என்ன செய்ய ?
திருச்சி மாவட்டத்தில் உள்ள மத்திய அரசில் பணிபுரியும் நண்பர் ஒருவர் தனது வீடுகட்ட ஒரு கிரௌண்ட் நிலம் வாங்கி பின்னர் பட்டா பெயர் மாற்றம் செய்ய VAO கார்த்திகேயன் என்பவரை அணுகியுள்ளார். VAO 15000 ருபாய் கொடுத்தால் ஒருவாரத்தில் பட்டா பெயர் மற்றம் செய்துதருகிறேன் என கூறியுள்ளார். 15000 ல் ஒரு ருபாய் கூட குறைக்கமுடியாது என VAO கூறிவிட்டாராம். பணத்துடன் சமயபுரம் பேருந்து நிலையத்தில் நின்று போன் அடித்தால் ஒரு ஆட்டோக்காரர் வந்து வாங்கிக்கொள்வார் என VAO கூறினாராம். கடுப்பாகி போன நண்பர் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளார். குறிப்பிட்ட துறை போலீசார் நண்பரை 2-3 நாட்கள் அலையவிட்டு பின்னர் ருபாய் 15000 ம் சொந்த பணத்தை தயார் செய்து போலீசாரிடம் கொடுத்து கைரேகை பொடியை தடவி அணைத்து நோட்டுகளையும் வீடியோ எடுத்து procedure செய்து வாங்கி கொள்ள சொன்னார்களாம். தனியார் வாடகை காரை நண்பர் செலவில் ஏற்பட்டு செய்ய சொன்னார்களாம். பின்னர் காவல்துறை அலுவலகத்தை விட்டு வெளியே வந்து டீ குடித்து கொண்டு இருந்தபோது VAO கார்திகேயனிடம் இருந்து போன் வந்ததாம். லஞ்சஒழிப்பு துறையிடம் புகார் செய்தீர்களா என கேட்டுள்ளார், நண்பர் விழி பிதுங்கி சமாளித்து VAO டமே சரணடைய ஆகி பணத்தை கொடுத்து வேலையை முடித்துள்ளார். விசாரித்த பின் தெரிய வந்ததாம், இந்த VAO ஏற்கனவே லஞ்ச வழக்கில் மாட்டி நிரபராதி என கோர்ட் முடிவு செய்து வெளியே வந்தவராம், திருச்சி ஏரியா மந்திரி நேருக்கு ரொம்ப நெருக்கமாம். கலிகாலம் யா.
கோட்டா கண்டுயெடுத்த பட்டா முத்துக்கு இருபதிந்தாயிரம்.
11 வருஷமாக எத்தனை சேர்த்தாரோ? வீட்டில் குவித்து வைத்திருப்பார் என்றா சோதனை செய்தார்கள்? அதெல்லாம் பத்திரமாகப் பதுக்கியிருப்பார் இந்தப் புகாரில் சிக்கியபின், அந்த மனுதாரரின் மனுவை தீர்வு செய்வார்கள் என்று நினைக்கிறீர்களா?