உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாக்காளர் சரிபார்ப்பு பணி துவக்கம்

வாக்காளர் சரிபார்ப்பு பணி துவக்கம்

புதுடில்லி: வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட, 47 லட்சத்திற்கு அதிகமான வாக்காளர் விபரங்களை சரிபார்க்கும் பணி நேற்று துவங்கியுள்ளது. எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி டில்லி மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஆக., 31ல், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், 47 லட்சத்திற்கும் அதிகமானோர், இடம் மாறியவர்கள், இறந்தவர்கள், இரண்டுக்கு மேற்பட்ட முகவரிகளை அளித்தது உள்ளிட்ட காரணங்களால் நீக்கப்பட்டனர். வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டோர், டிச., 4ம் தேதி வெளியிடப்பட உள்ள இறுதி பட்டியலில் தங்கள் பெயரை சேர்க்க, ‘படிவம் 6‘ பெற்று, பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !