உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கடலுக்குள் உள்ள உலகத்தை காண ஆசையா? 

கடலுக்குள் உள்ள உலகத்தை காண ஆசையா? 

கடல் பிடிக்குமா, மீன்கள் பிடிக்குமா, இந்த மீன்களை அதன் இருப்பிடத்திலேயே பார்க்க வேண்டும் என்ற ஆசை உள்ளதா. அப்படி என்றால் நீங்கள் வாழ்வில் ஒரு முறையாவது, 'ஸ்கூபா டைவிங்' செய்ய வேண்டும்.சுற்றுலாவில் மன அமைதியை தரும் சுற்றுலாக்கள், சாகசம் நிறைந்த மலையேற்றங்கள் என பல வகையிலான சுற்றுலாக்கள் உள்ளன. ஆனால், இதில் சற்று வித்தியாசமாகவும், ஒரு புது வித அனுபவத்தையும் ஏற்படுத்தக்கூடிய சுற்றுலாவாக உள்ளது ஸ்கூபா டைவிங்.ஸ்கூபா டைவிங் என்றால் கடலுக்கு அடியில் சென்று அங்கு உள்ள மீன்கள், சிற்பிகள், வித்தியாசமான உயிரினங்களை பார்த்து மகிழ்வது தான். எளிமையாக சொன்னால், நாம் வாழும் உலகத்தை போல, கடலுக்கு அடியில் இருக்கும் உலகத்தை நேரில் சென்று ரசிப்பதே.தற்போது, இது இந்தியாவில் மிக வேகமாக பிரபலமடைந்து வருகிறது. கர்நாடகாவிலும் இந்த ஸ்கூபா டைவிங் பிரபலமாகி வருகிறது. இதற்கு பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

புறா தீவு

இது கர்நாடகாவில், உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள நேத்ரானி எனும் தீவில் நடத்தப்படுகிறது. இந்த தீவு புறா தீவு என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு உள்ள கடல் நீர் தெளிவாக உள்ளது. இதனால் கடலின் உள் சென்று மீன்களை பார்த்து ரசிக்க முடியும். இது ஸ்கூபா டைவிங் செய்வதற்கு மிகவும் தகுதியான இடமாக அமைந்து உள்ளது. பார்ப்பதற்கே அழகான தீவில் கடலுக்கு அடியில் சென்று பார்த்தால் எப்படி இருக்கும் என சிந்தித்து பாருங்கள், பரவசம் அடைந்து விடுவீர்கள். இந்த ஸ்கூபா டைவிங் ஒரு நாள் முதல் மூன்று நாள் வரை நடைபெறுகிறது. இதற்கு 1,000 ரூபாய் முதல் 9,000 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. நண்பர்கள் பலருடன் இணைந்து சென்றால் கட்டணத் தொகை குறைவாக வசூலிக்கப்படும் என கூறப்படுகிறது. ஆனால், இதை அனைவராலும் செய்ய முடியாது. இதை செய்வதற்கு உடல் தகுதியும், மன உறுதியும் அவசியம்.

தேர்ச்சி

இந்த ஸ்கூபா டைவிங் செய்வதற்கு ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை போன்ற அரசு தரப்பில் வழங்க கூடிய ஏதாவது ஒரு ஆவணத்தை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும். டைவிங் செய்வதற்கு முன், மருத்துவ ஆய்வு செய்யப்படும். இந்த மருத்துவ ஆய்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். அப்போது தான் நீங்கள் கடலுக்குள் செல்ல முடியும்.மேலும், 2 லிட்டர் குடிநீர், துண்டு, நீச்சல் உடை, மாற்று உடை, சன் ஸ்கிரீம், சன் கிளாஸ், உடல் நலத்திற்கு பாதிப்பு வராத வகையிலான உணவுகள் கட்டாயம் எடுத்து செல்ல வேண்டும். ரயில்: மங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து முருடேஸ்வரா ரயில் நிலையத்திற்கு வரவும். பின், அங்கிருந்து படகு மூலம் நேத்ரானி தீவுக்கு செல்லலாம்.பஸ்: மங்களூரு பஸ் நிலையத்தில் இருந்து தனியார் டிராவல்ஸ் பஸ் மூலம் முருடேஸ்வராவுக்கு சென்று, அங்கிருந்து படகு மூலம் தீவை அடையலாம்.

எப்படி செல்வது?

- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி