உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வக்ப் வழக்கு: தலைமை நீதிபதி விலகல்

வக்ப் வழக்கு: தலைமை நீதிபதி விலகல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வக்ப் திருத்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை, அடுத்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரிக்கும் என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.வக்ப் திருத்தச் சட்டம், அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் செல்லாது என அறிவிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை, தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

போதிய நேரம் இல்லை

இந்நிலையில், தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா வரும் 13ம் தேதி ஓய்வு பெறுகிறார். அடுத்த தலைமை நீதிபதியாக, பி.ஆர்.கவாய் பதவியேற்க உள்ளார்.இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார், கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது:இந்த வழக்கு தொடர்பாக அமர்வு எழுப்பியுஉள்ள அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்து, பதில் மனுவை தாக்கல் செய்துள்ளோம். ஒவ்வொரு கேள்விக்கும் இதில் பதில் உள்ளது. இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவே விசாரிக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளது.ஆனாலும், போதிய நேரம் இல்லாததால், அதற்கு வாய்ப்பில்லை என்று தோன்றுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

விவாதிக்க வேண்டும்

இதைத் தொடர்ந்து தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கூறியதாவது:ஓய்வு பெறும் நாள் மிக விரைவில் வருகிறது. இந்த வழக்கில், மத்திய அரசு மிகவும் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்துஉள்ளது. அதில், பல விஷயங்கள் குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும்.விரைவாக விசாரித்து எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க போதிய அவகாசம் இல்லை. அதனால், இதற்கு மேலும் நாங்கள் விசாரிப்பதைவிட, அடுத்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரிப்பதே உகந்ததாக இருக்கும்.பதிவு செய்யப்பட்டு உள்ள வக்ப் சொத்துக்கள் எண்ணிக்கை தொடர்பாக மத்திய அரசு அளித்துள்ள தகவலுக்கும், மனுதாரர்கள் கூறும் தகவல்களுக்கும் இடையே பெரிய வேறுபாடு உள்ளது. இவ்வாறு இந்த வழக்கில் பல விஷயங்கள் குறித்து விரிவாக விவாதம் நடத்தப்பட வேண்டியது அவசியம்.அதனால், வழக்கின் விசாரணை, வரும் 15ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.இவ்வாறு தலைமை நீதிபதி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

மீனவ நண்பன்
மே 06, 2025 21:05

13 ந்தேதி ஓய்வு பெறுகிறார்...15 ந் தேதிக்கு ஒத்திவைத்திருக்கிறார் ..ரிலே ரேஸ் மாதிரி …இப்போ நாட்டில் செண்டிமெண்ட் சரியில்லை ..வழக்கு ஜவ்வு மாதிரி இழுத்துக்கொண்டு போகும் .


Ravi Kulasekaran
மே 06, 2025 11:47

நீ போ சாமி ரொம்ப நல்ல நீதிபதி நீ நேர்மையின் சிகரம் நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் நடவடிக்கைகள் இல்லை ஆளுநர் ஜனாதிபதி மசோதாகள் ஒரு மாதத்தில் அமுல்படுத்த வேண்டும் நீ ஒரு வழக்கை எத்தனை நாட்களில் தீர்வு சொல்லுற ஒரு மாதத்தில் தீர்வு வர வேண்டும் அனைத்து நீதிமன்றங்களுக்கு உத்தரவு போட முடியுமா நீ உடனே இடத்தை காலி பண்ணு சாமி புண்ணியமா போகும் மோடி மீது உனக்கு என்ன பகையோ


c.mohanraj raj
மே 06, 2025 10:52

பெரும்பான்மை எம்பிக்களால் சட்டம் இயற்றப்பட்டு விவாதம் செய்து ஜனாதிபதி ஒப்புதலுக்குப் பின் கொண்டு வந்த சட்டத்தை இவர்கள் மாற்ற நினைத்தால் நீதிபதிகளை வீட்டிற்கு தான் அனுப்ப வேண்டும்


Barakat Ali
மே 06, 2025 08:56

என்ன கட்டாயமோ? எந்தக்காரணமாக இருந்தாலும் இது மக்களின் நம்பிக்கைக்கு அநீதி... நீதிபதிகளும் அரசியல் செய்யக்கூடாது.. அல்லது வழக்கை எடுத்திருக்கவே கூடாது..


Varadharajan Srinivasan
மே 06, 2025 07:13

திராவிட கொள்கைதான் தெரியவில்லை என்றால் இல்லை என முடிவு செய்வது.


சமீபத்திய செய்தி