உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மோசடி செய்திகளால் ஏமாறாதீர்கள்; அரசு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

மோசடி செய்திகளால் ஏமாறாதீர்கள்; அரசு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி, அரசின் ஏதோ ஒரு முக்கிய துறையில் இருந்து தகவல் கேட்பதாகக் கூறி, அரசு அதிகாரிகளை குறிவைத்து சைபர் தாக்குதல் நடக்கும் அபாயம் உள்ளது. அதனால்,அரசு அதிகாரிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.மத்திய அரசின் என்.ஐ.எஸ்., எனப்படும் தேசிய தகவலியல் மையம், அனைத்து அமைச்சகங்கள், அரசு துறைகளுக்கு சமீபத்தில் அனுப்பிய சுற்றறிக்கை:'விஷ்ஷிங்' எனப்படும், மொபைல்போனில் குரல் பதிவு செய்திகளை அனுப்பி மோசடி செய்வது அதிகரித்துள்ளது. குறிப்பாக அரசு அதிகாரிகளுக்கு இதுபோன்ற செய்திகள் அனுப்பப்படுகின்றன. அதில், ஒரு குறிப்பிட்ட அரசு அமைப்பு அல்லது துறையின் அதிகாரி அனுப்பியதுபோல் காட்டுகின்றனர்.அதிகாரிகளின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் அவர்களுடைய பணி தொடர்பான தகவல்களை மோசடியாளர்கள் கேட்பர். இது உடனடியாக தேவை என்றும், மிகவும் முக்கியமானது, ரகசியமாக வைக்கவும் என்றும்நெருக்கடி கொடுத்து, தகவல்களை கேட்பர்.இதற்காக அவர்கள், தங்களுடைய மொபைல்போன் எண்களை மறைத்து, அரசு அதிகாரிகளின் எண்ணைப் போல காட்டுவர். காலர் ஐ.டி., எனப்படும் அழைப்பவரின் அடையாளத்தை தெரிந்து கொள்ளும் வசதியை நம்ப வேண்டாம். அதிலும் மோசடி செய்கின்றனர்.அதனால், இதுபோன்ற செய்திகள் வந்தால், அந்த அழைப்பு உண்மையிலேயே குறிப்பிட்ட அரசு துறையிடம் இருந்து வந்ததா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.தனிப்பட்ட மற்றும் தன் வேலை தொடர்பான தகவல்களை பகிர்வதில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்பாவி
நவ 07, 2024 07:13

டிஜிட்டல் புரட்சி. நாடு வெளங்கிடும். நாலு ப்ராடுகளை பிடிச்சு தூக்கில் போட்டால் அடங்குவானுங்க. ஆனா இங்கே உச்ச நீதி மன்றமே அவிங்களுக்கு சப்போர்ட்டா பேசுது.


Kasimani Baskaran
நவ 07, 2024 05:50

காலர் ஐடி சேவை வழங்கும் தொலை தொடர்பு நிறுவனங்கள்தான் அழைப்பவர் யார் என்பதை உறுதி செய்ய வேண்டும். அதை செய்யாமல் வேறு என்ன செய்தாலும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக தொலைத்தொடர்பு நிறுவனமே செயல்படுவது போலத்தான் ஆகைவிடும்.


முக்கிய வீடியோ