உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது: கர்நாடகா மறுப்பு

காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது: கர்நாடகா மறுப்பு

புதுடில்லி: தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட கர்நாடகா மறுத்துள்ளது.காவிரி நதிநீர் பங்கீட்டை முறைப்படி நிர்வகிக்க, சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக்குழு அமைக்கப்பட்டன. இந்த இரு அமைப்புகளும் அவ்வப்போது கூடி நதிநீர் பங்கீடு குறித்து ஆலோசித்து வருகின்றன. ஆணையத்தின் முந்தைய கூட்டம் ஜூன் 23ம் தேதி கூடியது.இதுவரை 52 கூட்டங்கள் நடைபெற்று முடிந்த நிலையில், 53வது ஆணையக் கூட்டம் புதுடில்லியில் இன்று (ஜூலை 22) கூடியது. கூட்டத்திற்கு ஆணைய தலைவர் எஸ்.கே. ஹல்தார் தலைமை ஏற்றார். தமிழகம் சார்பில் நீர்வளத்துறை முதன்மை செயலாளர் சத்திய பிரதா சாகு, காவிரி தொழில் நுட்ப குழுத்தலைவர் சுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். கர்நாடகா தரப்பிலும் அம்மாநில நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட கர்நாடகா மறுப்பு தெரிவித்து உள்ளது. கர்நாடகாவில் மழைப்பொழிவு குறைவு, பெங்களூருவின் குடிநீருக்கு தண்ணீர் தேவை இருக்கிறது. எனவே தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாத சூழல் நிலவுகிறது என்று கர்நாடகா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

D Natarajan
ஜூலை 22, 2026 20:49

உச்ச ஈதி மன்றம் கூட ஒன்றும் செய்ய முடியாது


ஆரூர் ரங்
ஜூலை 22, 2026 19:50

அங்குள்ள அணைகளில் இல்லாத நீரை அவர்களிடம் கேட்டு அடம்பிடித்தால் தண்ணீர் உள்ள போதும் வம்பு செய்வார்கள்.


Nandakumar Naidu
ஜூலை 22, 2026 19:38

அண்டை மாநிலத்திற்கு தண்ணீர் கூட கொடுக்க மறுக்கும் கேடு கெட்ட காங்கிரஸ் தேச சமூக விரோதிகள் நாட்டின் ஒற்றுமையைப்பற்றி பேசுகிறார்கள். தேச சமூக விரோதிகள் மற்றும் தீவிரவாதிகளுக்காக போராட்டம் நடத்தும் தேச விரோத போலி காந்தி குடும்பம் இதைப்பற்றி ஏன் இன்னும் வாய் திறக்கவில்லை? இங்கிருக்கும் காங்கிரஸ் கட்சி வாயில் கொழுக்கட்டை வைத்துக்கொண்டு பேச முடியாமல் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் நம் தமிழகத்தின் சாபக்கேடு.


baskkaran Kg
ஜூலை 22, 2026 18:49

எப்போதெல்லாம் அங்கு காங்கிரஸ் வரும்போது இந்த தகறாரு கிளப்புறானுக ,


ManiK
ஜூலை 22, 2026 18:38

இதுக்கும் இந்த தவெக விஜய்ஜோசப் வாயை தொறக்கமாட்டாரு. ஆனாலும் அந்த விசில் கூட்டம் சாதனை இன்ஸ்டா மீம்ஸ் ரெடியா பரப்புவானுங்க. அப்பாவி மக்களும் ஏமாறுவானுங்க.


தாமரை மலர்கிறது
ஜூலை 22, 2026 18:32

விவசாயத்தை விட, குடிப்பதற்கு தண்ணீர் அவசியம் தேவை. அரிசியை ஆந்திரா, கேரளாவில் இருந்து கூட நம்மால் வாங்கிக்கொள்ள முடியும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை