உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குளிர் காலத்திலும் இளநீர் விலை உயர்வு

குளிர் காலத்திலும் இளநீர் விலை உயர்வு

பெங்களூரு: குளிர்காலத்திலும் இளநீர் அதிக விலைக்கு விற்கப்படுவதால், பொது மக்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.பொதுவாக இளநீர் விலை கோடைக்காலத்தில் அதிகமாகவும், குளிர் காலத்தில் குறைவாகவும் விற்கப்படும்.ஆனால், தற்போது கர்நாடகாவில் குளிர் காலத்தில் இளநீர் விலை அதிகரித்து உள்ளது. இதனால் பொது மக்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.கர்நாடகாவில் பல மாவட்டங்களில் இளநீர் விலை அதிகமாக உள்ளது. கோடைக்காலத்தில் 30 முதல் 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட இளநீர், தற்போது 50 முதல் 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.கடந்த ஆண்டு இளநீர் விளைச்சல் குறைவு, தென்னை மரங்களில் ஏற்பட்ட நோய் தாக்குதலால் தேங்காய் விலையும் அதிகமாகி உள்ளதாக இளநீர் வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை