உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏரிகளின் நீர் தரம் குறைவு மாநில அரசுக்கு நோட்டீஸ்

ஏரிகளின் நீர் தரம் குறைவு மாநில அரசுக்கு நோட்டீஸ்

பெங்களூரு,: பெங்களூரில் ஏரிகளின் தண்ணீர் தரம், மிகவும் மோசமாக உள்ளது என, மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை அளித்ததால், கர்நாடக அரசுக்கு எதிராக தேசிய பசுமை தீர்ப்பாயம் சாட்டையை சுழற்றியுள்ளது.பெங்களூரில் உள்ள ஏரிகள் சீர்குலைந்துள்ளன. கழிவுநீர் கலப்பதால், தண்ணீர் அசுத்தமடைந்துள்ளது. இதைத் தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சமூக ஆர்வலர்கள் புகார் அளித்திருந்தனர்.இதை தீவிரமாக கருதிய தீர்ப்பாயம், ஏரிகளில் கழிவுநீர் கலக்காமல், கழிவுநீர் சுத்தகரிப்பு மையம் அமைக்கும்படி, சில ஆண்டுகளுக்கு முன்பு, அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.இதற்கிடையே ஏரிகளின் தண்ணீரை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி, பசுமை தீர்ப்பாயம், மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டது. இதன்படி ஆய்வு செய்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை அளித்துள்ளது. பெங்களூரின் 15 ஏரிகளில், கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைத்த பின்னரும், ஏரிகள் நீரின் தரம் மேம்படவில்லை என, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இதனால் அதிருப்தி அடைந்த பசுமை தீர்ப்பாயம், மத்திய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல், வனத்துறை, பெங்களூரு மாநகராட்சி, நகர மாவட்ட கலெக்டருக்கு, நேற்று முன் தினம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை