உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடக தமிழர்களை ஒற்றுமைப்படுத்த புதிய அமைப்பு நாம் சோழர்கள்

கர்நாடக தமிழர்களை ஒற்றுமைப்படுத்த புதிய அமைப்பு நாம் சோழர்கள்

பெங்களூரு: கர்நாடக தமிழர்களை ஒற்றுமைப்படுத்துவதற்காக, 'நாம் சோழர்கள்' என்ற புதிய அமைப்பு பெங்களூரில் துவங்கப்பட்டுள்ளது.இதன் சர்வதேச தலைவர் ஜெயபிரகாஷ் குருஜி. இவர், மாநில அமைப்பாளராக விஸ்வகவி திருவள்ளுவர் சங்கத் தலைவர் பையப்பனஹள்ளி ரமேஷ், துணை அமைப்பாளராக விநாயக் ஆகியோரை நியமித்துள்ளார். இவர்கள் நேற்று முன்தினம் பொறுப்பேற்றனர்.தலைவர் ஜெயபிரகாஷ் குருஜி பேசுகையில், ''எங்கள் அமைப்பு, தமிழ் மன்னர்களுக்கானது. உலகில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெயர் வாங்கிக் கொடுத்தவர்கள் சோழர்கள். இந்த அமைப்பு ஏற்கனவே துவங்கப்பட்டு உலகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. ''கடந்த மூன்று ஆண்டுகளாக வெளிநாடு, தமிழகத்தில் வசிக்கும் தமிழர்களுக்கு ராஜராஜசோழன் விருதுகளை வழங்கி கவுரவிக்கிறோம்,'' என்றார்.பையப்பனஹள்ளி ரமேஷ் பேசுகையில், ''நாம் சோழர்கள் அமைப்பில் தமிழர்கள் ஒன்று சேர வேண்டும். கவுரவம், அரசியல், அரசு பணிகளில் பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும். அது தான் எங்கள் நோக்கம். ''பலத்தை காட்டினால் மட்டுமே நம்மை அடையாளப்படுத்த முடியும். எப்போது, 50,000 பேர் முதல் ஒரு லட்சம் பேர் கூடி பலத்தை காட்ட போகிறோம் என்று தெரியவில்லை. யாருடைய தலைமையில் வேண்டும் என்றாலும் பலத்தை காட்டட்டும்,'' என்றார்.கர்நாடக தி.மு.க., அவை தலைவர் பெரியசாமி, பொருளாளர் தட்சிணாமூர்த்தி, இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராஜசேகர், பெங்களூரு தமிழ் சங்க முன்னாள் செயலர் ஸ்ரீதரன், ராமசந்திரன், எம்.ஜி.ஆர்., மணி, காங்கிரஸ் பாலகிருஷ்ணன், விஸ்வநாதன். ராஜசேகர், வேலு பிரபாகரன், செந்தில், தொழிலதிபர் தட்சிணாமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர் ஸ்ரீதர், ஆதர்ஷா ஆட்டோ சங்க செயலர் சம்பத், ராஜகுரு, தமிழடியான், ரவி கோவலன், திருமலை உட்பட தமிழ் அமைப்பினர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ