நிரூபித்துள்ளோம்!
நாட்டின் பெருமை, கண்ணியத்தை பொறுத்தவரை, நாங்கள் ஒருபோதும் சமரசம் செய்யவில்லை. 2016 சர்ஜிக்கல் ஸ்டிரைக்; 2019 வான்வழி தாக்குதல்; ஆப்பரேஷன் சிந்துார் விவகாரங்களில், நாட்டின் ஒற்றுமை, இறையாண்மை மற்றும் குடிமக்களின் உயிரை பாதுகாக்க, எந்த எல்லைக்கும் செல்வோம் என்பதை நிரூபித்துள்ளோம். ராஜ்நாத் சிங் ராணுவ அமைச்சர், பா.ஜ.,
வெட்கக்கேடானது!
எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல், 65,000 கன அடி நீரை தாமோதர் பள்ளத்தாக்கு கழகம் திறந்து விட்டது வெட்கக்கேடானது. இதனால், மேற்கு வங்கத்தின் தெற்கு மாவட்டங்களில் உள்ள மக்கள், வெள்ள அபாயத்தை எதிர்கொண்டு உ ள்ளனர். இந்த பொறுப்பற்ற செயல், விழாக்களின் போது துயரத்தை ஏற்படுத்தும் முயற்சி. மம்தா பானர்ஜி மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்.,
ஜனநாயக இதயத்தில் முள்!
நம் நாட்டுக்கு எதிரான வெளிநாட்டு சக்திகளின் கொடி ஏந்திய பிரசாரகராக, காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் மாறி விட்டார். அவரிடம் மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவரை போன்ற ஒரு எதிர்க்கட்சித் தலைவர் இருப்பது, இந்திய ஜனநாயகத்தின் இதயத்தில் முள் இருப்பதை போன்றது. சுதான்ஷு திரிவேதி செய்தி தொடர்பாளர், பா.ஜ.,