உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க வேண்டும்: பிரதமர் மோடி

வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க வேண்டும்: பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க காந்தியின் லட்சியங்கள் நமக்கு உத்வேகம் அளிக்கிறது என அவரது நினைவு தினத்தில் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.காந்தியின் 78வது நினைவுதினத்தையொட்டி, டில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில், பிரதமர் மோடி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் ராகுல், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பின்னர் சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: காந்தியின் நினைவுத் தினத்தில் அவருக்கு அஞ்சலிகள். வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க அவரது லட்சியங்கள் நமக்கு உத்வேகம் அளிக்கிறது. நமது தேசத்திற்காக தியாகம் செய்த அனைவருக்கும் நான் அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களின் சேவை மற்றும் தியாகங்களை நினைவு கூர்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Ramesh Sargam
ஜன 30, 2025 20:40

இந்தியா வளர்ச்சி அடைவதை நம் நாட்டில் இருக்கும் ஒரு சில தேசதுரோக கட்சிகள் விரும்புவதில்லை.


Rajarajan
ஜன 30, 2025 17:27

எப்படி ? ஒருபக்கம் அரசு ஊழியருக்கு மொத்த கஜானாவை தாரைவார்த்து வளர்ச்சி ஏற்படுத்தி, மறுபக்கம் தனியார் ஊழியரை வரியில் கசக்கி பிழிந்து சக்கையாக்குவதை போலவா ?? இதானே எல்லா மத்திய / மாநில அரசுகளின் வளர்ச்சி உங்க ஒர்க் நல்லா இருக்கு.


பல்லவி
ஜன 30, 2025 15:14

சொந்த மாநிலத்தை முன்னேற்றியது பெருமை தான்


அப்பாவி
ஜன 30, 2025 14:56

அதான் உங்க ஆளுங்க சுட்டுட்டாங்களோ!


ஆரூர் ரங்
ஜன 30, 2025 14:07

நாடு விடுதலை பெற்ற காலக்கட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட நாடுகளும் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றன. அங்கெல்லாம் பெரிய போராட்டம் உயிர் தியாகங்கள் இல்லை. இங்கு மட்டுமே ஒரு மனிதரின் தியாகத்தால் மட்டுமே விடுதலை கிடைத்ததாக நம்ப வைக்கப்பட்டுள்ளது. முப்பது கோடி மக்களில் முப்பது லட்சம் பேர் கூட விடுதலைப் போராட்டத்தில் நேரடியாகக் கலந்து கொண்ட சான்றுகள் இல்லை. அஹிம்சையை நம்பாத மதத்தவர்களிடம் அஹிம்சா முறையில் பழகக் கூறியது பெரும் இழப்புக்களுக்கே காரணமானது. பாரத மாதாவுக்கு ஜே.


mdg mdg
ஜன 30, 2025 14:07

எல்லா இடத்திலும் ஊழல் மற்றும் லஞ்சம் பரவிவிட்டது. எப்படிங்க இந்தியா வளர்ச்சியடையும்?


சமீபத்திய செய்தி