உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசியம்: தனித்து போட்டியிடுவோம்!

தேசியம்: தனித்து போட்டியிடுவோம்!

தனித்து போட்டியிடுவோம்!

உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள, 403 தொகுதிகளில் தனித்து போட்டியிட எங்கள் கட்சி தயாராகி வருகிறது. அதே சமயம், பா.ஜ., உடன் கூட்டணி வைக்கவும் ஆலோசித்து வருகிறது. இது குறித்து தேர்தல் நெருங்கும் சமயத்தில் முடிவு எடுக்கப்படும். கூட்டணி ஒத்துவராவிட்டால், தனித்து களமிறங்குவோம்.- சிராக் பஸ்வான்மத்திய அமைச்சர், லோக் ஜனசக்தி கட்சி

சிறையில் அடைக்கப்படுவர்!

உ.பி., சட்டசபை தேர்தலில் தங்களது தோல்வி உறுதியாகி விட்டதை உணர்ந்துள்ள ஆளும் பா.ஜ., மற்றும் அதன் சதிகார கூட்டாளிகள், போலி வாக்காளர்களை பட்டியலில் சேர்க்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர். இந்த சதித்திட்டத்துக்கு துணை போகும் அரசு அதிகாரிகள், நிச்சயம் சிறையில் அடைக்கப்படுவர்.- அகிலேஷ் யாதவ்தலைவர், சமாஜ்வாதி கட்சி

அறிவியல் தெரியாத முட்டாள்கள்!

பெட்ரோலில் நிர்ணயிக்கப்பட்டபடி, 20 சதவீத எத்தனாலே கலக்கப்படுகிறது. அளவுக்கு அதிகமாக எத்தனால் கலக்கப்படுவதாகக் கூறுபவர்கள், அறிவியல் தெரியாத முட்டாள்கள். பெட்ரோலில் உள்ள எத்தனால் அளவை யார் வேண்டுமானாலும் பரிசோதிக்கலாம். கலப்படம் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டால் விசாரணை நடத்தப்படும்.- சுரேஷ் கோபிமத்திய இணை அமைச்சர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி